போட்டியை ரத்து செய்த நடுவர்கள்.. கடுப்பான பாகிஸ்தான் அணி! நடந்தது என்ன?

இதயும் பாருங்க

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை

கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாகன பட்டியலை தமிழக பொலிஸார் வெளியிட்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கை வழியாக 6...

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு...

ப.சிதம்பரம் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், காங்கிரஸ்...

Pakistan vs Sri Lanka Match called off  : பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையே ஆன உலகக்கிண்ண லீக் போட்டி மழையால் ஆடுகளம் பாதிக்கப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது.

உலகக்கிண்ண தொடரின் லீக் சுற்றின் 11ஆவது போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் சந்திக்கவிருந்தன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெறும் என்றே பலரும் கணித்து இருந்தனர்.

ALLSO SEE: ஆஹா..! என்ன ஒரு கூட்டு முயற்சி..! குஷியில் கோலி

இலங்கை அணியின் துடுப்பாட்டமம் மிகவும் பலவீனமாக இருப்பதால், எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தது பாகிஸ்தான் அணி. ஆனால், போட்டி நடைபெற இருந்த பிரிஸ்டல் நகரில் பெய்த மழை அவர்கள் கனவை கலைத்தது.

ALLSO SEE: சரியாக போட்டி ஆரம்பிக்க சில மணி நேரம் இருக்கும் போது மழை பெய்யத் ஆரம்பித்தது. போட்டியின் மூன்று மணி நேரதிற்கும் மேல் மழை பெய்தது. பின்னர், மழை நின்று, வெயில் அடிக்கத் ஆரம்பித்தது. இதனால், போட்டி ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது.

ALLSO SEE: 35 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

நடுவர்கள் ஆடுகளத்தை பரிசோதித்தனர். பின்னர், மீண்டும் சில நிமிடங்கள் கழித்து ஆலோசனை செய்தனர். இப்படியே ஒரு மணி நேரத்திற்கும் மேல் சென்றது. ஆடுகளத்தின் பல பகுதிகள் நீர் தேங்காமல் சரியாக இருந்தாலும், ஒரு பகுதியில் மட்டும் நீர் அதிக அளவில் தேங்கி இருந்தது.

அது தான் நீண்ட நேர விவாதத்திற்கு காரணம். மழை விட்ட பின்பு அந்த பகுதியை பணியாளர்கள் சரி செய்ய முயலவில்லை. மாறாக, நடுவர்கள் மட்டுமே அது குறித்து விவாதித்து வந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், வீறு கொண்டு ஆடுகளத்துக்குள் நுழைந்து நடுவர்களிடம் ஏதோ கூறினார்.

ALLSO SEE: யாருகிட்ட.. கடைசி வரை போராடிய ஆப்கன்

அதன் பின்பு, அரைமணி நேரம் கழித்து மூன்று நடுவர்கள் மேட்ச் ரெப்ரீ ஆகியோர் போட்டியை நடத்தலாமா? வேண்டாமா? என விவாதித்து வந்த போதும் அவர் ஆடுகளத்துக்குள் நுழைந்து நடுவர்களிடம் பேச முயன்றார். ஆனால், நடுவர் ஒருவர் அவரை வெளியேறுமாறு கூறினார்.

மிக்கி ஆர்தர் வேகமாக உடை மாற்றும் அறைக்கு சென்றார். பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் பவுண்டரி எல்லை அருகே கூடி நின்றனர். இதனால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது. எனினும், நடுவர்கள் மோசமான ஆடுகளத்தை காரணம் காட்டி போட்டியை ரத்து செய்தனர்.

ALLSO SEE: குறைந்த ஓட்டங்களில் சுருண்டது பாகிஸ்தான்

இதனால், பாகிஸ்தான் அணியினர் ஏமாற்றத்துக்கு ஆளாகினர். பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அணி மூன்றாம் இடத்தையும், இலங்கை அணி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

இது புதுசு

கென்னடி கிளப்

நடிகர்-சசிகுமார் நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன் இயக்குனர்-சுசீந்திரன் இசை-இமான் ஓளிப்பதிவு-குருதேவ் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான...

கென்னடி கிளப்

நடிகர்-சசிகுமார் நடிகை-மீனாட்சி கோவிந்தராஜன் இயக்குனர்-சுசீந்திரன் இசை-இமான் ஓளிப்பதிவு-குருதேவ் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி பயிற்சியளித்த...

பக்ரீத் விமர்சனம்

நடிகர் -விக்ராந்த் நடிகை-வசுந்தரா காஷ்யாப் இயக்குனர்-ஜெகதீசன் சுபு இசை-இமான் ஓளிப்பதிவு-ஜெகதீசன் சுபு நாயகன் விக்ராந்த் சில போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். இதற்காக வங்கி கடனுக்காக அலைகிறார். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விக்ராந்துக்கு அவரது...

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வாத்தமானி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ், முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின்...

இன்றைய ராசிபலன் 24/08/2019

மேஷம்: இன்று . எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை...

More Articles Like This