விரைவில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'.. நாயகியாக கமல் பட ஹீரோயின்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 5 ஆண்டுகள் ஒளிபரப்பான நிலையில் சமீபத்தில் முடிவடைந்தது. ஐந்து அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடைபெறும் பாச போராட்டம் தான் இந்த தொடரின் கதை.
இந்த தொடரில் முதல் பாகத்தில் மூர்த்தி ஆக நடித்த ஸ்டாலின், இரண்டாம் பாகத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிகை உள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’அக்னி நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக நிரோஷா அறிமுகம் ஆகி அதன் பின்னர் கமல்ஹாசன் நடித்த ’சூரசம்ஹாரம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள நிலையில் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தில் ஐந்து அண்ணன் தம்பிகளுக்கான கதையாக இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் ஸ்டாலின் - நிரோஷா தம்பதியின் மூன்று மகன்கள் குறித்த கதையம்சம் என்பது ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.