ஆப்கானிஸ்தான் வைத்த ஆப்பு.. பரிதாப நிலையில் நியூசிலாந்து, பாகிஸ்தான்
லீக் சுற்றில் ஏழாவது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் இருப்பதால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஆன போட்டியில் ஆஸ்திரேலியா பெற்ற வெற்றியின் மூலம் 2 புள்ளிகள் கூடுதலாக சேர்த்து 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
லீக் சுற்றில் ஏழாவது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் இருப்பதால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த நிலையில், மீதமுள்ள ஒரு அரை இறுதி இடத்துக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையே போட்டி எழுந்துள்ளது.
இப்போது புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா என மூன்று அணிகள் தவிர அரை இறுதிக்கு முன்னேற இன்னும் ஒரு அணி மட்டுமே தேர்வாக வேண்டும்.
அந்த ஒரு இடத்துக்கு புள்ளிப் பட்டியலில் ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு லீக் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளன.
ஆப்கானிஸ்தான் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தில் இருந்தாலும் தனது அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் அந்த அணி வெற்றி பெற்றால் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டிகளில் பெரிய வெற்றியை பெற்று ஆப்கானிஸ்தான் அணியை விட கூடுதல் நெட் ரன் ரேட் பெற வேண்டும்.
அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா செல்லுமா? போட்டி ரத்து ஆகுமா? சர்ச்சையை கிளப்பிய ஆப்கானிஸ்தான் வீரர்
தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரே பின்னடைவாக இருப்பது நெட் ரன் ரேட் மட்டுமே. அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.330 ஆக உள்ளது.
மேலும், அந்த அணி தனது கடைசி இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என்ற இரண்டு வலுவான அணிகளை எதிர் கொள்ள இருக்கிறது. அந்த அணிகளை ஆப்கானிஸ்தான் வெல்லவும் வாய்ப்பு உள்ளது.
அந்த இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி - தோல்வி தான் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பை நிர்ணயிக்கப் போகிறது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரை தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தன் கடைசி லீக் போட்டியில் ஆட உள்ளது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.
அதே போல, நியூசிலாந்து அணியும், இந்தியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணிக்கு எதிராக ஆட வேண்டும். அந்தப் போட்டியில் இமாலய வெற்றியை பதிவு செய்ய முயல வேண்டும். நியூசிலாந்து அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை செமி பைனல் - பாகிஸ்தானுக்கு அடிச்ச லக்.. இந்தியா வெற்றியால் கிடைத்த அரிய வாய்ப்புஉலகக்கோப்பை செமி பைனல் - பாகிஸ்தானுக்கு அடிச்ச லக்.. இந்தியா வெற்றியால் கிடைத்த அரிய வாய்ப்பு
உலகக்கோப்பை புள்ளிப் பட்டியல்
இந்தியா (7 போட்டிகள், 14 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (7 போட்டிகள், 12 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (7 போட்டிகள், 10 புள்ளிகள்), நியூசிலாந்து (8 போட்டிகள், 8 புள்ளிகள், நெட் ரன் ரேட் +0.398), பாகிஸ்தான் (8 போட்டிகள், 8 புள்ளிகள், நெட் ரன் ரேட் +0.036), ஆப்கானிஸ்தான் (7 போட்டிகள், 8 புள்ளிகள், நெட் ரன் ரேட் -0.330), இலங்கை (7 போட்டிகள், 4 புள்ளிகள்), நெதர்லாந்து (7 போட்டிகள், 4 புள்ளிகள்), வங்கதேசம் (7 போட்டிகள், 2 புள்ளிகள்), இங்கிலாந்து (7 போட்டிகள், 2 புள்ளிகள்).