ஆப்பு வைத்த இரண்டு வீரர்கள்.. அணித் தேர்வில் சொதப்பிய ரோஹித்...!

இந்திய அணி தடுமாறியதை பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் டீன் எல்கர் எளிதாக ரன் குவித்து சதம் அடித்தார். 

ஆப்பு வைத்த இரண்டு வீரர்கள்.. அணித் தேர்வில் சொதப்பிய ரோஹித்...!

தென்னாபிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகின்றது. ரோஹித் சர்மாவின் விருப்பதால் தேர்வு செய்யப்பட்ட வேகப் பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்குர் திணறி வருகின்றனர்.

வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜை மட்டுமே நம்பி இந்திய அணி தடுமாறியதை பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் டீன் எல்கர் எளிதாக ரன் குவித்து சதம் அடித்தார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. வழக்கமாக டெஸ்ட் அணியில் ஸ்விங் பவுலிங் இடம் பெறும் பும்ரா, முகமது சிராஜ் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் அணியில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்கள் எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இன்னும் 5 விக்கெட்கள் கையில் இருப்பதால் 100 அல்லது அதற்கும் மேற்பட்ட ரன்களில் அந்த அணி முன்னிலை பெற வாய்ப்பு உள்ளது. இந்திய அணியின் இந்த மோசமான நிலைக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தான் காரணம். குறிப்பாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்குர் தான் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதிக ரன்களை வாரி இறைக்கும்  அவர்களை அணியில் ரோஹித் சர்மா தேர்வு செய்தார். பிரசித் கிருஷ்ணாவுக்கு இதுவே அறிமுக டெஸ்ட் போட்டி. அவர் உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் கூட அதிகம் ஆடியது இல்லை. 

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் எல்லாம் அதிக ரன்களை வாரி இறைத்து இருந்தார். ஆனாலும், உயரமானவர், பவுன்ஸ் வீசுவார் என அவரை அணியில் தேர்வு செய்தார் ரோஹித் சர்மா.

அடுத்து ஸ்விங் பந்து வீசும் முகேஷ் குமாரை தேர்வு செய்யாமல், ஆல் - ரவுண்டர் என்ற காரணத்தால் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில், போட்டியில் தாக்குர் பேட்டிங்கில் 24 ரன்கள் குவித்தது மட்டுமே ரோஹித் சர்மா போட்ட திட்டத்தின்படி நடந்தது. மற்றபடி பந்துவீச்சில் தாக்குர் மற்றும் பிரசித் படுமோசமாக செயல்பட்டனர்.

தாக்குர் 24 ரன்கள் எடுத்தது போல பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அடைந்தார். ஆனால், அதுவும் கூட புதிதாக பேட்டிங் ஆட வந்த அனுபவம் குறைந்த விக்கெட் கீப்பர் கைல் விக்கெட்டை தான் வீழ்த்தி இருந்தார். 

முகமது சிராஜ், பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். தாக்குர் 1 விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மேலும், அவர் ஓவருக்கு சராசரியாக 4.80 ரன்கள் விட்டுக் கொடுத்து சொதப்பி இருந்தார். 

பிரசித் கிருஷ்ணா ஓவருக்கு 4.10 ரன்கள் கொடுத்து இருந்தார். சிராஜ் ஓவருக்கு 4.20 ரன்கள் கொடுத்த போதும் இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp