பூஜை செய்யும்போது முக்கியமான இருக்க வேண்டிய மூன்று பொருட்கள் பற்றி தெரியுமா?

பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் பஞ்சபூதங்களும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. பஞ்சபூதங்களும் ஒன்றிணையும் இடத்தில் தான் இறை சக்தி உருவாகிறது.

பூஜை செய்யும்போது முக்கியமான இருக்க வேண்டிய மூன்று பொருட்கள் பற்றி தெரியுமா?

காலை, மாலை இரு வேளையும் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட்டால் சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். விளக்கேற்றாத இல்லங்களில் ஐஸ்வரியம் சேராது என்பதோடு துரதிர்ஷ்டங்கள் துரத்தும். கஷ்டம் மேல் கஷ்டம் வரும் என சொல்லப்படுவது உண்டு.

நம்மால் தினமும் விளக்கேற்றி வழிபட முடியாவிட்டாலும் கூட வாரம் தோறும் தவறாமல் விளக்கேற்றி வழிபட்டு வருகிறோம். இப்படி விளக்கேற்றி வழிபடும் பொழுது பூஜையில் இருக்கக் கூடிய முக்கியமான இந்த 3 பொருட்கள் இல்லை என்றால் வேண்டுதல் பலன் தராது என்று நம்பப்படுகிறது. 

பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் பஞ்சபூதங்களும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. பஞ்சபூதங்களும் ஒன்றிணையும் இடத்தில் தான் இறை சக்தி உருவாகிறது.

இந்த பஞ்சபூதங்களில் ஒன்று இல்லை என்றாலும் இறை சக்தி அங்கு உருவாகாது. நிலம், காற்று, ஆகாயம் ஆகிய மூன்றும் பொதுவானது. இதில் நெருப்பு மற்றும் நீரை நாம் தான் பூஜை அறைக்கு கொண்டு வர வேண்டும். 

நெருப்பு

விளக்கு ஏற்றுவதன் மூலமும், கற்பூர ஆரத்தி காண்பிப்பதன் மூலமும் நெருப்பைக் கொண்டு வருகிறோம்.  

நீர்

ஆனால் நீர் இல்லாமல் பூஜை செய்யக் கூடாது என்பது தான் இதன் முக்கிய தாத்பரியம் ஆகும். எனவே கலசம் ஒன்றில் நீரை வைத்து பின்னர் தான் பூஜையை துவங்க வேண்டும்.

தாம்பூலம்

தாம்பூலம் என்பது மங்களகரமான ஒரு முக்கிய பொருள் ஆகும். முன்னைய காலத்தில் வெற்றிலை, பாக்கு வைத்து பூஜையை செய்வது உண்டு. ஆனால் வெற்றிலையின் பயன்பாடு குறைவதால் இன்று அவற்றை தவிர்த்து வருகிறோம். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றை வைத்து பின்னர் பூஜையை தொடங்கினால் வேண்டியது அப்படியே நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp