இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? புட்டு புட்டு வைத்த புஜாரா

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா பேசி உள்ளார்.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? புட்டு புட்டு வைத்த புஜாரா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா பேசி உள்ளார்.

“இந்திய வீரர்களுக்கு பிங்க் நிற பந்தில் விளையாடிய அனுபவம் பெரியதாக கிடையாது. ஆஸ்திரேலியாவை பொருத்தவரை அடிலெய்ட்டில் பிங்க் நிற பந்து டெஸ்டில் அவர்கள் தோற்றதே கிடையாது. 

இதுவரை விளையாடி பிங்க் நிற பந்தில் விளையாடி, ஆஸ்திரேலிய அணி ஒருமுறைதான் தோல்வியை தழுவி உள்ளதுடன், அடிலெய்டில் அவர்கள் தோற்றது கிடையாது. ஆனால் இந்திய அணி வீரர்களுக்கு போதிய அனுபவம் இல்லை.

அதேபோன்று பந்துவீச்சாளர்களும் பல தவறுகளை செய்திருக்கிறார்கள். குறிப்பாக டிராவிஸ் ஹெட்டுக்கு ஷார்ட் பால்களை எதிர்கொள்ள சிக்கல் இருக்கிறது. இது அனைத்து எதிரணி வீரர்களுக்குமே தெரியும்.

ஆனால் நாம் இதுவரை மூன்றே மூன்று ஷார்ட் பால்தான் அவருக்கு வீசி இருந்தோம். ஷார்ட் பாலை இன்னும் அதிக அளவு ஹெட்டுக்கு எதிராக நாம் பயன்படுத்திருக்க வேண்டும்.

ஆப்சைடில் டிராவிஸ் ஹெட், சிறப்பாக எதிர் கொண்டு ரன்களை சேர்த்தார்.அவருக்கு 6-3 என்ற வீரர்களை ஆப்சைடிலும், லெக்சைடிலும் நிறுத்துவதற்கு பதிலாக 5-4 என்ற எண்ணிக்கையில் ஆப்சைடிலும் லெக்சைடிலும் பீல்டர்களை நிறுத்தி இருக்க வேண்டும்.

இதேபோன்று பிங்க் நிற பந்தில் விளையாடிய அனுபவம் இந்திய அணி வீரர்களுக்கு இல்லாதது இன்றைய ஆட்டத்தில் தெரிந்ததுடன், நமது வீரர்கள் ஷாட்டை ஆடும் போது தாமதமாக எதிர்கொண்டார்கள். 

அணியின் ஆலோசனை கூட்டத்தில் நாம் எப்போது ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். எப்போது தற்காத்து விளையாடி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்திருக்க வேண்டும். இரண்டு, மூன்று விக்கெட்டுகள் இருந்த போது கம்பேக் கொடுப்பது தொடர்பாக இந்திய அணி ஆலோசித்திருக்க வேண்டும். 

பண்ட் அதிரடியாக ஆடியது நல்ல விஷயமாக நினைக்கின்றேன். எனினும் அவர் மீது அனைத்து பொறுப்பும் வந்து விழுவது சரி கிடையாது. இந்த போட்டியில் நாம் அனுபவம் இல்லாத காரணத்தால் தான் தோற்றோம். சிவப்பு நிற கிரிக்கெட் பந்தில் நாம் மீண்டும் நன்றாக விளையாடுவோம் என நம்புகிறேன்” என்றார் புஜாரா.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp