5 போட்டி... 538 ரன்கள்.. 62ஆவது சதம்.. உச்சக்கட்ட ஃபார்மில் புஜாரா.. அணிக்கு வருகிறாரா?

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் புஜாரா உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார்.

5 போட்டி... 538 ரன்கள்.. 62ஆவது சதம்.. உச்சக்கட்ட ஃபார்மில் புஜாரா.. அணிக்கு வருகிறாரா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வீரர்களான விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா உள்ளிட்டோர் விலகியுள்ளனர். 

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்திய அணி முழுக்க முழுக்க யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மட்டுமே நம்பி உள்ளது.

இதனால் விராட் கோலி அணிக்கு திரும்பும் வரை சீனியர் வீரரான புஜாராவை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் கோரிக்கை வைக்கப்படுகின்றது.

இனி சரிவராது.. ஒழுங்காக ஆடாத வீரரின் பையை வீட்டுக்கே அனுப்பி வைத்த பிசிசிஐ... என்ன நடந்தது?

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் புஜாரா உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் செளராஷ்டிரா அணி 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், புஜாரா களம் புகுந்தார். 

சிறப்பாக ஆடிய புஜாரா சதம் விளாசி அசத்தினார். 230 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 9 பவுண்டரிகள் உட்பட 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் நடப்பு ரஞ்சி சீசனில் மட்டும் 8 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்கள் உட்பட 538 ரன்களை விளாசி தள்ளியுள்ளார். 

ஏற்கனவே முதல்தர கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் புஜாரா. தற்போது இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக ரஞ்சி கிரிக்கெட்டில் 62வது சதத்தை விளாசியுள்ளார்.

மீண்டும் உச்சக்கட்ட ஃபார்மிற்கு திரும்பியுள்ள புஜாராவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. 
கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணியின் 33 விக்கெட்டுகளை இங்கிலாந்து ஸ்பின்னர்கள் வீழ்த்தியுள்ள நிலையில் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp