இளம் புயல் ரச்சின் ரவீந்திராவை போட்டியே இல்லாமல் வாங்கிய சிஎஸ்கே... அடித்த ஜாக்பாட்!
கேப்டன் தோனி ஆஃப் - ஸ்பின்னர்களை அதிக அளவில் பயன்படுத்துவார். அதன் காரணமாக ரச்சின் ரவீந்திராவை அந்த அணி வாங்கி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்ததை விட குறைந்த பணம் கொடுத்து ஐபிஎல் மினி ஏலத்தில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை வாங்கியது.
2023 உலகக்கோப்பை தொடரில் மிக இளம் வயதில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்ற ரச்சின் ரவீந்திரா இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்.
பெங்களூர் வீரர் என்பதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை வாங்க போட்டி போடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பெங்களூர் அணி அவரை ஏலத்தில் கேட்கவே இல்லை.
ஆனால், டெல்லி கேபிடல்ஸ் - சிஎஸ்கே அணிகள் ஏலத்தில் ரவீந்திராவை வாங்க போட்டி போட்ட நிலையில், ரவீந்திராவின் அடிப்படை விலையான 50 லட்சத்தில் இருந்து 1.80 கோடியுடன் அவருக்கான ஏலம் முடிவுக்கு வந்தது.
ரச்சின் ரவீந்திரா பேட்டிங் செய்வதோடு, ஆஃப் ஸ்பின் பவுலிங்கும் போடுவார். அதன் காரணமாகவே சிஎஸ்கே அணி போட்டி போட்டு இவரை வாங்கியது.
சென்னை சேப்பாக்கம் அணி சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதுடன், கேப்டன் தோனி ஆஃப் - ஸ்பின்னர்களை அதிக அளவில் பயன்படுத்துவார். அதன் காரணமாக ரச்சின் ரவீந்திராவை அந்த அணி வாங்கி உள்ளது.
பெரிய போட்டி இல்லாமல் வெறும் 1.80 கோடிக்கு ரச்சினை சிஎஸ்கே அணி வாங்கியது ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். அத்துடன், நியூசிலாந்து அதிரடி வீரர் டேரில் மிட்செல்லை 14 கோடிக்கு வாங்கி இருக்கிறது சிஎஸ்கே.