சக்கர நாற்காலியில் வந்த டிராவிட்.. பதறிய வீரர்கள்.. நடந்தது என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படும் ராகுல் டிராவிட் மைதானத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த காட்சியை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை மைதானத்தில் ராகுல் டிராவிட் சந்தித்தார். 

அப்போது அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து சில தகவல்கள் வெளியானது.

கர்நாடக மாநில கிரிக்கெட் அமைப்பின் லீக் தொடர் ஒன்றில் விஜயா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக விளையாடி இருக்கிறார் ராகுல் டிராவிட். அந்தப் போட்டியில் விளையாடிய போது அவரது இடது காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத அளவுக்கு உள்ளது.

எனினும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களுடன் ஆலோசகராக உடன் இருக்க வேண்டும் என்பதால் சக்கர நாற்காலியில் ஐபிஎல் தொடரில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.