ஐசிசி உலக கோப்பை 2023 - அணியில் அஸ்வினை சேர்த்ததே இதுக்குத்தான்.. முக்கிய வீரரை ஓரங்கட்ட டிராவிட் மாஸ்டர் பிளான்

ஐசிசி உலக கோப்பை 2023: உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் பெரிய பலவீனமாக ஜடேஜா உள்ளதாகவும், அதை சரி செய்யவே அஸ்வினை அணிக்குள் வர வைத்துள்ளார் பயிற்சியாளர் டிராவிட் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஐசிசி உலக கோப்பை 2023 - அணியில் அஸ்வினை சேர்த்ததே இதுக்குத்தான்.. முக்கிய வீரரை ஓரங்கட்ட டிராவிட் மாஸ்டர் பிளான்

ஐசிசி உலக கோப்பை 2023: உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் பெரிய பலவீனமாக ஜடேஜா உள்ளதாகவும், அதை சரி செய்யவே அஸ்வினை அணிக்குள் வர வைத்துள்ளார் பயிற்சியாளர் டிராவிட் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய அணியில் ஆல் - ரவுண்டர் என்ற அடையாளத்துடன் இடம் பெற்று இருக்கும் ஜடேஜா இந்த ஆண்டு இதுவரை ஒருநாள் போட்டிகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், அவரை உலகக்கோப்பை அணியிலும் தேர்வு செய்து விட்டது இந்திய அணி. அவர் ஃபார்முக்கு வந்தால் இந்தியாவுக்கு அது பெரிய வகையில் சாதகமான சூழலை போட்டிகளில் ஏற்படுத்தும். ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில் அவர் தன்னை நிரூபிக்க எதையும் செய்யவில்லை.

இனியும் காலம் தாழ்த்தினால் சிக்கல். அதே சமயம் ஜடேஜாவை அணியில் இருந்து நீக்குவதில் கிரிக்கெட்டை தாண்டிய சிக்கல் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

அவரிடம் இன்றும் இருக்கும் ஒரு திறமை - பீல்டிங். இந்திய அணியில் யுவராஜ் சிங், முகமது கைஃப்புக்கு பின் சிறந்த பீல்டர் என்றால் அது ஜடேஜா மட்டுமே.

ஆனால், அது ஒன்று மட்டுமே போதுமா? என்பதே இப்போது உள்ள பெரிய கேள்வி. அதே சமயம், 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கோப்பை வெல்ல வைத்ததே அவர்தான். 

இதையும் படிங்க: ஐசிசி உலக கோப்பை 2023 - நடுவரானாரா ஸ்ரேயாஸ் ஐயர்? அவரை போலவே யாருய்யா இவரு? ரசிகர்கள் ஆச்சரியம்!

ஆனால், பேட்டிங், பவுலிங் என்ற முக்கிய பணிகளை தவிர மற்ற காரணங்கள் மட்டுமே ஜடேஜாவுக்கு சாதகமாக உள்ளன.

இந்த நிலையில், ஜடேஜாவை உலகக்கோப்பை தொடரில் சில முக்கிய போட்டிகளிலாவது வெளியே உட்கார வைத்து விட்டு அவர் இடத்தில் அஸ்வினை ஆட வைக்கவே பயிற்சியாளர் டிராவிட் அணிக்குள் அஸ்வினை அழைத்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

ஜடேஜாவை போல அஸ்வின் செயல்பட அவர் பேட்டிங்கிலும் அணிக்கு கைகொடுக்க வேண்டும். அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் ஒரு நல்ல பேட்ஸ்மேன். ஆனால், ஒருநாள் போட்டி சூழ்நிலையில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டும்.

அதற்காகவே கடந்த சில நாட்களாக அஸ்வின் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தற்போது பயிற்சியாளர் டிராவிட் உடன் அதிக நேரம் செலவிடும் வீரர் அஸ்வின் தான். 

இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருப்பதை போட்டிகளின் இடையேயும், வலைப் பயிற்சியிலும் பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp