மழை பெய்தாலே வாய்ப்பு காலி... பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

பாகிஸ்தான் அயர்லாந்து அணிகள்  மோதும் போட்டி நடக்கவுள்ள புளோரிடாவில் வரும் வாரத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

மழை பெய்தாலே வாய்ப்பு காலி... பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல போராடி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில்  பாகிஸ்தான் உள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஓவரில் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதுடன், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில்தான்,  பாகிஸ்தான் அணி கனடாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 

எனினும், இந்தியாவும், அயர்லாந்து அணியும் அமெரிக்க அணியை வீழ்த்தினால் தான் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதேபோன்று பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நிலையில் மழை குறுக்கிட்டு போட்டி ரத்தானால் பாகிஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விடும். முன்னதாக, இந்தியா அமெரிக்கா மோதும் இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இந்த ஆட்டம் மழையால் ரத்தாகி இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பெற்றால், அமெரிக்க அணி ஐந்து புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியாவுடன் தகுதி பெற்று விடும். 

பாகிஸ்தான் அயர்லாந்து அணிகள்  மோதும் போட்டி நடக்கவுள்ள புளோரிடாவில் வரும் வாரத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

இதனால், அங்கு நடைபெறும் பெரும்பாலான ஆட்டங்கள் மழையால் ரத்தாக கூடும் என்ற நிலையில், பாகிஸ்தான் அயர்லாந்து போட்டியும் ரத்தானால் பாகிஸ்தான் அணியால் மூன்று புள்ளிகள் மட்டுமே பெற முடியும். 

இதனால்,  சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் செல்ல முடியாது என்பதால்,  இனிவரும் போட்டிகளில் மழை பெய்யக் கூடாது என்று பாகிஸ்தான் ரசிகர்கள் இப்போதே பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp