தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

48
W3Schools

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 167ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது.

இப்படத்தின் இந்த படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் ‘கத்தி’ படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்க உள்ளது.

இந்நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு விரையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

W3Schools