Saturday, January 25, 2020.
Home சினிமா 16 வயதினிலே ரஜினி எடுத்த சபதம் என்ன தெரியுமா!

16 வயதினிலே ரஜினி எடுத்த சபதம் என்ன தெரியுமா!

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினிகாந்த் தனது கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும், அதையடுத்து தான் எடுத்த சபதம் குறித்தும் பேசினார்.

அதாவது, 16 வயதினிலே படத்தில் நடித்து வந்தபோது ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளர் தான் தயாரிக்கும் ஒரு படத்தில் என்னை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அழைத்தார்.
நான் பத்தாயிரம் சம்பளம் கேட்டேன். ஆனால் அவர் ஆறாயிரம் தருவராக சொன்னார். அதையடுத்து முன்பணமாக ஆயிரம் ரூபாய் கேட்டேன். படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பு தருவதாக சொன்ன அவர், தரவே இல்லை.

அதனால் ஆயிரம் முன்பணம் தந்தால்தான் நடிப்பேன் என்று நான் சொன்னதால், என் படத்தில் உனக்கு வேலை இல்லை. வெளியே போ என்று அவர் சொல்லிவிட்டார்.

அதனால் மிகுந்த மனவேதனையுடன் நான் வெளியே சென்று கொண்டிருந்தபோது சிலர், இது எப்படி இருக்கு என்று என்னைப்பார்த்து கிண்டல் செய்தார்கள்.
அப்போதுதான் இதே கோடம்பாக்கத்தில் இதே சாலையில் இதே ஏவிஎம் ஸ்டுடியாவில் ஒரு பெரிய ஸ்டாராகத்தான் உள்ளே நுழைவேன் என்று எனக்குள் ஒரு சபதம் எடுத்தேன்.

அதன்பிறகு இரண்டே வருடத்தில் சில படங்களில் நடித்து சம்பாதித்து ஒரு வெளிநாட்டு கார் வாங்கினேன். அந்த காருக்கு ஒரு வெளிநாட்டு நபரை டிரைவராகவும் போட்டேன். பின்னர் ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் சென்று அதே இடத்தில் அந்த காரை நிறுத்தி விட்டு ஸ்டைலாக சிகரெட் பிடித்தேன்.

பின்னர் கே.பாலசந்தர் சாரிடம் சென்று என் காரை ஆசீர்வதிக்க சொன்னேன். ஆனால் அவரோ, காரையும், வெளிநாட்டு டிரைவரையும் மேலும் கீழும் பார்த் தவர் எதுவும் சொல்லாமல் போய் விட்டார்.

இதனால் அதிர்ச்சியுடன் வீட்டிற்கு வந்து யோசித்தேன். அப்போதுதான் இந்த வெற்றி எனக்கு மட்டுமே கிடைத்ததல்ல. என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நான் நடித்த கேரக்டர், அந்த படத்தின் வெற்றி இது எல்லாமே சேர்ந்துதான் எனக்கு இந்த வெற்றியை கொடுத்தது.

இது எல்லாம் சேர்ந்துதான் என்னை பெரிய ஆளாக்கியது என்பதை புரிந்து கொண்டேன் என்று சொல்லி, நான் அடைந்துள்ள இந்த வெற்றிக்கு நான் மட்டுமே காரணமல்ல என்னை வைத்து படமெடுத்த அனை வருக்கும் பங்கு உண்டு என்பது போல் பேசினார் ரஜினிகாந்த்.

இதயும் பாருங்க...

புதிய கொரோனா கிருமியால் மேலும் 17 பேர் பாதிப்பு

சீனாவின் வூஹான் நகரில், புதிய கொரோனா (Corona) கிருமியால் மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவரின் நிலை மோசமாக உள்ளது. இம்மாதம் 13ஆம் தேதிக்கு முன்னர் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் அந்த நோயாளிகளிடம்...

இந்திய அணியைப் பதம் பார்க்கும் காயங்கள்

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவிருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருந்த பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா அந்தப் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் அணியிலிருந்து அவர்...

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு ; விண்ணப்பங்கள் தவறான முறையில் விநியோகம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் தவறான முறையில் விநியோகிக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள்...

கொரோனோ கிருமி தொடர்பில் கடும் அவதானம்

சீனாவில் வூஹான் நகரில் பரவி வரும் புதிய கொரோனோ கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளர் எவரும், இலங்கைக்கு வந்துள்ளனரா என்பது தொடர்பில் கடும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர்...

ஆன்மீகம்

பொங்கலோ பொங்கல்…! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்...! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை...

காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா?

நமக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதற்காக அந்த இறைவனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் மேற்கொள்வதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். வேண்டுதல்கள் அந்த இறைவனின் காதில் விழுவதற்காக பலவகையான காணிக்கைகளையும் கூட நாம் செய்வோம். ஆனாலும்...

ஏகாதசி விரதம்! முக்கியமான 30 தகவல்கள்!

ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மசர்யம்,...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் அன்றே திரளான பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை...
error: Content is protected !!