ரஜினியின் ‘தர்பார்’ பட வில்லன் யார் தெரியுமா?

64
W3Schools

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் வில்லன்களில் ஒருவராக பாலிவுட் நடிகர் பிரதிக்பாபர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இவர் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘பாகி 2’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ் ‘தர்பார் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும், இந்த படத்தில் பிரதிக்பாபர், மெயின் வில்லனின் மகனாக நடிக்கின்றார் என்றும் கூறப்படுகிறது

ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படம் அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

W3Schools