களனி, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகளவான மழை பெய்துவரும் நிலையில், குறித்த கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

குறித்த கங்கைகளை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.