Latest news from around the world

இந்திய அணியின் மானத்தை கப்பலேற்றிய ரவி சாஸ்திரி..! கொதித்துபோன ரசிகர்கள்

Ravi Shastris Photo With Two Female : தென்னாபிரிக்க அணிக்கு எதிரான உலகக்கிண்ண தொடரில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரண்டு பெண்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

அதை கண்ட நெட்டிசன்கள் ஏகத்துக்கும் வறுத்து தள்ளிவிட்டனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கி உள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், கொஞ்சம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

ஒரு வாரம் கடந்த நிலையில் நேற்று தென்னாபிரிக்காவுடன் தமது முதல் போட்டியில் இந்தியா விளையாடியது. அதில் இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.

வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு திடீர் ஊக்க மருந்து சோதனை

போட்டியில் வெற்றி பெற்றதால் இந்திய ரசிகர்கள் ஆனந்த கூத்தாடியதுடன், முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் உலகக்கிண்ணம் இந்தியாவுக்கு தான் என்று உற்சாக குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 2 பெண்களோடு எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலை தளத்தில் வைரலானது.

போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு வெளியே, ரசிகர்கள் திரண்டு கொண்டாடி மகிழ, அதற்கு சில மணி நேரங்கள் முன்பாக அதாவது போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்த செயல் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த போட்டோவைப்பார்த்த ரசிகர்கள், இது தான் இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கிண்ண பயிற்சியா? என்று கொந்தளித்து விட்டனர். ஐபிஎல்லில் இருந்து மீண்டு வரவில்லை என்றும் கருத்தும் காட்டமாக கூறி இருக்கின்றனர்.