அஸ்வினுக்கு இனி இடமில்லை... அணியில் புது வீரர்: 31 வயது வீரரை உள்ளே கொண்டு வரும் தோனி!

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில், முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்ற நிலையில், கையில் லேசான எலும்பு முறிவு எனக் கூறி ருதுராஜ் விலகிவிட்டார்.

அஸ்வினுக்கு இனி இடமில்லை... அணியில் புது வீரர்: 31 வயது வீரரை உள்ளே கொண்டு வரும் தோனி!

ஐபிஎல் 18ஆவது சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில், முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்ற நிலையில், கையில் லேசான எலும்பு முறிவு எனக் கூறி ருதுராஜ் விலகிவிட்டார்.

தொடர்ந்து தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திரசிங் தோனி வழிநடத்தி வருகிறார். தோனி தலைமையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 

குறிப்பாக, 6ஆவது லீக் போட்டியில் தோனி கேப்டன்ஸியில் அஸ்வினை முன்கூட்டியே பேட்டிங் களமிறக்கினார்கள். இதனால், அஸ்வினுக்கு, தோனி முக்கியத்துவம் கொடுக்கிறார் எனக் கரிக்க்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் கருதினார்கள்.

ஆனால், 6ஆவது லீக் போட்டியில் அஸ்வின் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், 7ஆவது லீக் போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டார். அஸ்வினுக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அன்ஷுல் கம்போஜுக்கு அணியில் இடம் கிடைத்தது.

இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இனி பிளேயிங் 11-ல் இடம் கிடைக்காது எனவும், வேகத்திற்கு சாதகமான பிட்ச்களில், அன்ஷுல் கம்போஜும், சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் ஸ்பின்னர் ஷ்ரேயஸ் கோபாலையும் களமிறக்க தோனி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டிஎன்பிஎல் 2024 தொடரில், ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டார். குறிப்பாக, சேப்பாக்கத்தில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அதிரடி காட்டியதால்தான், அஸ்வினை சிஎஸ்கேவில் சேர்த்தார்கள். 

ஆனால், விளையாடிய 6 போட்டிகளிலும் ரவிச்சதிரன் அஸ்வின் தொடர்ந்து படுமோசமாக சொதப்பினார். ஒரு போட்டியில் கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால்தான், இனி அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காமல், ஷ்ரேயஸ் கோபாலுக்கு வாய்ப்பு கொடுக்க தோனி முடிவு செய்து உள்ளாராம்.

இதேவேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் 7 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது நிலையில், அடுத்த 7 போட்டிகளில் குறைந்தது 5 வெற்றிகள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.