ஐபிஎல் வரலாற்றில் ஜடேஜா படைத்த மெகா சாதனை .. 1000 ரன், 100 விக்கெட், 100 கேட்ச்
ஐபிஎல் தொடரில் அவரது 100ஆவது கேட்ச் என்ற நிலையில், ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றை படைத்து உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்கள் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அத்துடன், அவர் பிடித்த அபாரமான கேட்ச், ஐபிஎல் தொடரில் அவரது 100ஆவது கேட்ச் என்ற நிலையில், ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றை படைத்து உள்ளார்.
அதாவது, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த ஆல் - ரவுண்டரும் 1000 ரன்கள், 100 விக்கெட்கள் மற்றும் 100 கேட்ச்கள் என்ற மூன்று மைல்கல்களை எட்டியதில்லை என்ற நிலையில், இந்த மைல்கல் சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்து உள்ளார்.
சிறந்த சுழற் பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மொத்தம் இரண்டு கேட்ச்களை பிடித்தார்.
போட்டியின் முதல் பந்திலேயே பில் சால்ட் கொடுத்த கேட்ச் ஒன்றை பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் திருப்புமுனை கிடைக்க செய்தார்.
அதன் பின் கொல்கத்தா அணியில் அதிக ரன் சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த கேட்ச் ஒன்றை பல அடி தூரம் ஓடி வந்து பிடித்தார் ரவீந்திர ஜடேஜா.
அது பார்க்க எளிதான கேட்ச் போல இருந்தாலும் ஜடேஜா சரியாக கணித்து ஓடி வந்து பந்தை பிடித்ததன் மூலம் கடைசி ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்ற ஸ்ரேயாஸ் ஐயரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் தனது மூன்றாவது வெற்றியை தொட்டது.