கோலியை தூக்கிய ஏறிய தீர்மானம்.. ஆர்சிபி அணி அதிரடி? இந்த 2 வீரர்களுக்குதான் முக்கியத்துவம்!

விராட் கோலியை ஒதுக்க ஆர்சிபி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலியை தூக்கிய ஏறிய தீர்மானம்.. ஆர்சிபி அணி அதிரடி? இந்த 2 வீரர்களுக்குதான்  முக்கியத்துவம்!

விராட் கோலியை ஒதுக்க ஆர்சிபி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலம், வரும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கவுள்ள நிலையில்,  ஏலத்திற்கு முன், அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை, அடுத்த மாத துவக்கத்தில் இருந்து வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் ஆர்சிபி அணியால் கோப்பை வெல்ல முடியாத நிலையில், 18ஆவது சீசனுக்கான ஏலத்தில் அதிரடியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலக உள்ளதால் அவரை, பெரிய தொகை கொடுத்து ட்ரேடிங் செய்ய உள்ளனராம்.

கே.எல்.ராகுலை மட்டுமல்ல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜாஸ் பட்லரையும் வெளியேற்ற உள்ளதால், அவரையும் ட்ரேடிங் மூலம் வாங்க உள்ளதாக கருதப்படுகிறது.

பாப் டூ பிளஸிக்கு 40 வயதாகிறது. இதனால், அவரை தக்கவைக்க வாய்ப்பு மிகவும் குறைவு. மேலும், கடந்த சீசனோடு அவரது கேப்டன்ஸியை, அணி நிர்வாகம் முடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ட்ரேடிங்கில் கே.எல்.ராகுலை வாங்கும் பட்சத்தில் அவர்தான் கேப்டனாக இருப்பாராம். ஜாஸ் பட்லரையும் வாங்கிவிட்டால், அணியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் இந்த இருவர் மட்டுமே இருப்பார்களாம்.

டூ பிளஸி கேப்டனாக இருந்தாலும், அணியின் முக்கிய முடிவுகளை விராட் கோலி தான் எடுப்பாராம். களத்தில் பெயருக்கு மட்டுமே டூ பிளஸி கேப்டனாக செயல்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், அடுத்த சீசனில் இருந்து கோலியின் அதிகார வரம்பை குறைக்கவும் ஆர்சிபி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாம். இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள விராட் கோலி, இன்னமும் 3-4 ஐபிஎல் சீசன்களில்தான் விளையாடுவார். 

இதனால், தற்போது இருந்தே கோலி இல்லாமல் விளையாட பழக ஆர்சிபி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ட்ரேடிங்கில் ஒருவேளை கே.எல்.ராகுல், ஜாஸ் பட்லர் ஆகியோரை வாங்க முடியவில்லை என்றால், கிளென் மேக்ஸ்வெல்லை கேப்டனாக நியமிக்கவும் வாய்ப்பு உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp