கோலி, ரோஹித் அணிகளுக்கு நேர்ந்த கதி.. பிளே-ஆஃப் சுற்றுக்கு போவது சந்தேகம்!

மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதுடன், பெங்களூரு அணி நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகள், ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது.

கோலி, ரோஹித் அணிகளுக்கு நேர்ந்த கதி.. பிளே-ஆஃப் சுற்றுக்கு போவது சந்தேகம்!

2024 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பிளே-ஆஃப் போவதே சந்தேகம் என்ற நிலை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

2024 ஐபிஎல் தொடர் முடிந்த உடன்  2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எப்படி ஆடப் போகிறார்கள் என பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் இருந்தனர் .

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதுடன், பெங்களூரு அணி நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகள், ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது.

எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் முன்னேறும் வாய்ப்பு எளிதாக இருக்கும் என்பதுடன், இல்லாவிட்டால், நெட் ரன் ரேட் மற்றும் பிற அணிகளின் வெற்றி தோல்விகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படும். 

லீக் சுற்றில் எட்டு வெற்றிகளை பெற்ற அணிகள் மட்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளிலும் பிளே-ஆஃப் முன்னேறின. மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கு மீதமுள்ள 11 லீக் போட்டிகளில் 8 வெற்றிகளை பெற வேண்டும். 

பெங்களூரு அணி தனக்கு மீதிமிருக்கும் 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற வேண்டும். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...