இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. ரோஹித் செய்த மெகா தவறு!

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுக்க முடியாமல் 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை  தழுவியமைக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. ரோஹித் செய்த மெகா தவறு!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இதற்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்த தவறுகளே காரணம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுக்க முடியாமல் 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை  தழுவியமைக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி விலகிய போதே அனுபவ வீரரான புஜாராவை அணியில் சேர்த்திருக்க வேண்டும்.  ஆனால், புஜாரா மற்றும் ரஹானேவை அணியில் எடுக்க முடியாது என, என அடம் பிடித்து ரஜத் படிதார் என்ற வீரரை உத்தேச அணியில் சேர்த்தார்.

கோலி இல்லாமல் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை மிடில் ஆர்டரில் ஆட வைத்து சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் ரோஹித் அப்படி செய்ததாக கூறப்படுட்டது.

அதனால், கடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரன் குவிக்கவே திணறிய சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் என்ற இரண்டு சராசரி பேட்ஸ்மேன்கள் துடுப்பாட்ட வரிசையில் இடம்பிடித்தனர்.

அணித் தேர்வில்  ரோஹித் சர்மா சொதப்பிய நிலையில், முகமது சிராஜை முதல் இன்னிங்க்ஸில் சரியாக பயன்படுத்தவில்லை. அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் சேர்ந்து 8 விக்கெட்கள் வீழ்த்தினர். இங்கிலாந்து 246 ரன்களில் சுருண்டது.

இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 436 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணியை விரைவாக ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என திட்டம் போடாமல் தடுப்பாட்டம் ஆடும் வகையில் ஃபீல்டிங் அமைத்தார்  ரோஹித் சர்மா. 

அதனால் இங்கிலாந்து விக்கெட்களை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டதுடன்,  அட்டாக்கிங் ஃபீல்டிங் அமைத்து இருந்தால் ரன் போனாலும் விக்கெட்கள் வேகமாக சரிந்து இருக்கும். இதுவும் இந்திய அணிக்கு பின்னடைவே.

இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய போது இங்கிலாந்து அணி அட்டாக்கிங் ஃபீல்டிங் அமைத்து தான் போட்டியில் வென்றது.

இவ்வாறு  ரோஹித் சர்மாவின் ஃபீல்டிங் திட்டம் சொதப்பியதால் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்திருந்தது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp