உங்களை 'Bro' என  ஒரு பெண் கூப்பிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா..? 

ப்ரோ என்பது இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தையாகிவிட்டது.

உங்களை 'Bro' என  ஒரு பெண் கூப்பிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா..? 

ப்ரோ என்பது இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தையாகிவிட்டது. இது சகோதர அர்த்தத்தை தாண்டி பல காரணங்களுக்காகவும் பெண்கள் ப்ரோ என்னும் வார்த்தையை பயன்படுத்துகின்றனர். 

ஆனால் அதற்கான காரணம் என்ன? எந்த அடிப்படையில் அப்படி கூப்பிடுகிறார்கள் என்பதுதான் குழப்பமாக இருக்கிறது. இனி அந்த குழப்பம் வேண்டாம். எப்படியும் உங்கள் தோழி உங்களை ப்ரோ என கூப்பிட இந்த காரணங்களால் கூட இருக்கலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.

அனைவரையும் அப்படி...

சில பெண்கள் தனக்கு பிடித்த அல்லது தினமும் பழகும், பார்க்கும் அனைவரையும் பாரபட்சமின்றி ப்ரோ என அழைப்பார்கள். பெண்கள், ஆண்கள், வயதில் மூத்தவர்கள் என அனைவரையுமே அவர் ப்ரோ என அழைக்கலாம். அதன் அடிப்படையில் உங்களையும் அவர் ப்ரோ என அழைக்கலாம்.

உணர்ச்சிகளை மறைக்க...

உங்கள் மீது அவர் வைத்திருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், மறைக்கவும் ப்ரோ என அழைக்கலாம். அப்படி அவர் கூப்பிடும்போது அவரின் உடல் மொழி, முக பாவனைகளை கவனித்தாஏ கண்டுபிடித்துவிடலாம்.

நண்பராக மட்டும் நினைத்து...

உங்களை அவர் நல்ல நண்பராக பார்க்கிறார் என்றாலும் அவர் உங்களை ப்ரோ என அழைக்கலாம். அதற்கு பின் வேறு எந்த காரணமும் இல்லாமல் இருக்கலாம்.

பொடுகு தொல்லையால தலை அரிக்குதா? இதோ தீர்வு!

குழப்பமான மனநிலையில்...

உங்கள் மீது காதல் இருக்கிறதா இல்லையா என்கிற குழப்பம், தெளிவு அவருக்கே இல்லாமல் இருக்கலாம். அதனால் அவர் பாதுகாப்பிற்காக இப்படி கூப்பிடலாம். காதல் , உறவு போன்ற கமிட்மெண்ட் அவருக்கு பயத்தை கொடுக்கலாம். அதனால் அதற்குள் சென்றுவிடாமல் இருக்க அவ்வாறு கூப்பிடலாம்.

சகோதரராக பார்க்கலாம்... 

அவர் உங்களை நல்ல சகோதரராக நினைத்து கூட ப்ரோ என அழைக்கலாம். இது அவர் உங்கள் மீது காட்டும் அக்கறை ,அன்பு மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மற்றொரு நபர் மீது காதல்...

அவருக்கு மற்றொரு நபர் மீது காதல் இருக்கலாம். அதனால் கூட எந்த எண்ணமும் இல்லை. ஏற்கெனவே கமிடட் என்கிற மனநிலையில் அனைவரையும் ப்ரோ என அழைப்பது போல் உங்களையும் அழைக்கலாம். இதனால் யாரும் தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாம் இல்லையா.. அதற்காகக் கூட கூப்பிடலாம்.

நல்ல வழிகாட்டியாக இருக்க...

நீங்கள் வயதில் சிறியவர் எனில் உங்களை அவர் தம்பியாக நினைத்து ப்ரோ என அழைக்கலாம். அவர் உங்கள் எதிர்காலத்தின் மீது அக்கறையாக இருப்பார். பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். உதவி என்றால் உடனே செய்வார். பல விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். நிறைய ஆலோசனைகள் கொடுப்பார். இப்படியெல்லாம் இருந்தால் அவர் ப்ரோ என கூப்பிட அதுவும் காரணம்.

கோபம் கூட காரணமாக இருக்கலாம்...

இத்தனை நாள் இல்லாமல் திடீரென உங்களை ப்ரோ என அழைக்கிறார் எனில் உங்கள் செயல்பாடுகளால் ஏதோ கோபமடைந்திருக்கிறார் என அர்த்தம். எனவே நீங்கள் ஏதேனும் தவறு செய்தீர்களா என யோசித்து பாருங்கள். அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். சமாதானம் செய்து பாருங்கள்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp