இந்திய அணிக்கு ஐசிசி வைத்த ஆப்பு... தென்னாப்பிரிக்கா தொடருக்கு அம்பயரே இவருதான்!
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அம்பயர்களில் ஒருவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ இருந்தார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஒத்துவராத அம்பயரை ஐசிசி நியமித்து உள்ளது.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அம்பயர்களில் ஒருவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ இருந்தார்.
இவர், இந்திய அணி ஆடும் முக்கிய போட்டிகளில் நடுவராக வந்தால், அந்தப் போட்டியில் இந்தியா தோற்று விடும் என்ற கருத்து கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளது.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2014 டி20 உலகக்கோப்பை, 2015 ஒருநாள் உலகக்கோப்பை, 2016 டி20 உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி என அனைத்து அரையிறுதி போட்டிகளிலும் அவர் நடுவராக இருந்த நிலையில் இந்தியா தோற்று இருக்கிறது.
எனினும், அவர் தவறான தீர்ப்புகளை இந்தியாவுக்கு எதிராக அதிகம் வழங்கியதில்லை. சில சமயம் இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூட விமர்சனம் உள்ளது.
இருந்தும் அவர் இந்திய அணி ஆடும் போட்டிகளில் அம்பயராக வந்தால் இந்தியா தோற்கும் என்ற நிலைமை தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலாவது மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.