சீனியர் வீரர்களுக்கு ரிங்கு சிங் வைத்த ஆப்பு... தலைகீழாக மாறிய நிலைமை... டி20 அணியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

இதுவரை பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றால் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்காது என கூறப்பட்ட நிலைமை இப்போது தலைகீழாக மாறி உள்ளது.

சீனியர் வீரர்களுக்கு ரிங்கு சிங் வைத்த ஆப்பு... தலைகீழாக மாறிய நிலைமை... டி20 அணியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தீவிரமாக உள்ளனர்.

இதுவரை பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றால் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்காது என கூறப்பட்ட நிலைமை இப்போது தலைகீழாக மாறி உள்ளது.

அதாவது, இந்திய டி20 அணியில் ரிங்கு சிங் நிரந்தர இடத்தை பிடித்ததால் மூத்த வீரர்கள் சிலரது இடம் பறிபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஹித் சர்மா, ராகுல் டிராவிட்,அஜித் அகர்கர் ஆகிய மூவரின் விருப்பமான வீரராக மாறி உள்ள ரிங்கு சிங், ரசிகர்களின் விருப்பமான வீரராகவும் உள்ளார்.

விராட் கோலி கோட்டையில் தன் கொடியை நாட்டிய ரோஹித் சர்மா.. நடந்தது என்ன?

இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்றால் இந்த மூவரின் தேர்வு மிகவும் முக்கியம். ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ரிங்கு சிங் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் ஆடினார்.

மூன்று போட்டிகளிலும் தன்னிடம் இருந்து அணி என்ன எதிர்பார்க்கிறதோ அதை உணர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரிங்கு சிங். 

ஒரு ஃபினிஷர், அதுவும் எப்போதும் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டை ரிங்கு சிங் ஈர்த்து விட்டார்.

இதானால், டி20 அணியில் உலகக்கோப்பை பிளேயிங் லெவனில் ரிங்கு சிங் முக்கிய ஃபினிஷராக இருக்கப் போகிறார் என கூறப்படுகிறது. 

டி20 அணியில் ரிங்கு சிங் இடம் உறுதி செய்யப்பட்டதால் அவரை விட மூத்த வீரர்கள் சிலர் அணியில் தங்கள் வாய்ப்பை இழக்க உள்ளனர். 

கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ரிங்கு சிங்கால் வாய்ப்பை இழக்கப் போகும் வீரர்களில் முக்கியமானவர்கள். 

அதுமட்டுமின்றி, இந்திய பேட்டிங் ஆர்டரில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளனர். 

இதனால்,  திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா என சமீப காலங்களில் தங்களை நிரூபித்த சில இளம் வீரர்களும் கூட அணியில் வாய்ப்பை இழக்கக் கூடும்.

ஐந்து பந்துவீச்சாளர் போக மீதமுள்ள ஒரே ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடம் மட்டுமே உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கே அணியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp