ரிங்கு சிங்குவுக்கு சில லட்சம்.. அடி வாங்கிய பந்துவீச்சாளருக்கு 5 கோடி சம்பளம்.. ரசிகர்கள் கொதிப்பு!
இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
2022 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 55 லட்சத்துக்கு ரிங்கு சிங்கை வாங்கி இருந்தது. தற்போது ரிங்கு சிங்கின் ஐபிஎல் சம்பளம் 55 லட்சம்.
ஆனால், அவரிடம் அடி வாங்கிய யாஷ் சம்பளம் 5 கோடி. இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
யாஷ் தயாள் சராசரியான பந்துவீச்சாளர் எனும் நிலையில் அவருக்கு 5 கோடி வழங்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளதுடன், அவரை விட திறமைசாலியன ரிங்கு சிங்கிற்கு வெறும் 55 லட்சம் தான் சம்பளம் என்பதால், ஐபிஎல் ஏல முறையில் உள்ள குளறுபடிகள் தான் இதற்கு காரணம் எனவே அதை மாற்ற வேண்டும் என மற்றொரு விமர்சனமும் எழுந்துள்ளது.
யாஷ் தயாள் கடந்த 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 பந்தில் 28 ரன்கள் தேவை எனும் நிலைஇருந்தது.
யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரில் ரிங்கு சிங் அந்த ஐந்து பந்துகளிலும் சிக்ஸ் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். அப்போது முதல் யாஷ் தயாள் மீது கடும் விமர்சனம் இருந்தது.
இந்த நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியும் அவரை விடுவித்தது. பெங்களூர் அணிக்கு நல்ல வேகப் பந்துவீச்சாளர் தேவை எனும் நிலையில் அந்த அணி யாஷ் தயாளுக்கு 5 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.
ரிங்கு சிங் அடுத்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியால் விடுவிக்கப்பட்டு, அதே அணியால் மீண்டும் பல கோடிகள் கொடுத்து வாங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.