ரிங்கு சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கோடீஸ்வரனான ரிங்கு.. 5 வருடத்தில் பெரும் வளர்ச்சி!
உள்ளூர் போட்டிகளில் சில ஆண்டுகளாக விளையாடி மொத்தமாக ஒரு கோடி ரூபாய் வரை அவருக்கு கிடைத்திருக்கும்.
இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரிங்கு சிங், விளம்பரங்களில் கூட பெரியளவில் நடிக்காத நிலையில் ஐந்து வருடங்களில் பல கோடிகளை சம்பாதித்து இருக்கிறார்.
பெரு நிறுவனங்கள் அவரை விளம்பரங்களுக்கு பெரிய அளவில் பயன்படுத்தவில்லை என்றாலும், தன் கடின உழைப்பால் கோடீஸ்வரன் ஆகி இருக்கிறார் ரிங்கு சிங்.
ரிங்கு சிங் தந்தை வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலையை செய்து வந்தார். கிரிக்கெட் ஆட வேண்டும் என ஆசைப்பட்ட ரிங்கு சிங்கிற்கு அவரது தந்தையிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனினும், தாயிடமும், சகோதரரிடமும் பணத்தை வாங்கி கிரிக்கெட் உபகரணங்களை வாங்கியுள்ளார்.
2017ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்க, 2018இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 80 லட்சம் ரூபாய்க்கு வாங்க வீடு கட்டினார் ரிங்கு சிங்.
கொல்கத்தா அணியிடம் நான்கு ஆண்டுகள் சம்பளமாக 80 லட்சம் பெற்ற ரிங்கு சிங், 2022 ஏலத்தில் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 55 லட்சம் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
CEAT டயர்ஸ், MRF டயர்ஸ் மற்றும் எஸ்ஜி எனும் கிரிக்கெட் உபகரணங்கள் விற்கும் நிறுவனமும் மட்டுமே ரிங்கு சிங்கை குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்ய அவருக்கு 50 லட்சம் கிடைத்து இருக்கும் என சொல்லப்படுகின்றது.
அத்துடன், உள்ளூர் போட்டிகளில் சில ஆண்டுகளாக விளையாடி மொத்தமாக ஒரு கோடி ரூபாய் வரை அவருக்கு கிடைத்திருக்கும்.
ஆக, ஐபிஎல் மூலம் 4.40 கோடி, உள்ளூர் போட்டிகள் மூலம் 1 கோடி, விளம்பரம் மூலம் 50 லட்சம், தற்போது இந்திய அணிக்கு ஆடி வருவதன் மூலம் ஒவ்வொரு டி20 போட்டிக்கும் சம்பளமாக 3 லட்சம் வாங்குகிறார்.
இதனால், சில ஆண்டுகளில் ரிங்கு சிங் சுமார் 6 கோடி வரை சம்பாதித்துள்ளதுடன், இனி வரும் நாட்களில் விளம்பர நிறுவனங்கள் அவரை சுற்றி வளைக்கும் என்பதால் விரைவில் பல கோடிகளை அவர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.