இப்படி செஞ்சுட்டிங்களே ரிங்கு.. கம்பீர் கண்முன்னே தோனியை பாராட்டிய வீரர்
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, இந்திய அணி இன்று 150 ரன்கள் வரை சேர்ப்பது கடினம் என்று பார்க்கப்பட்ம நிலையில், நிதிஷ்குமார் 34 பந்துகளில் 74 ரன்கள் குவித்து நிலைமையை மாற்றிவிட்டார்.
அத்துடன், இந்திய டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட ரிங்கு சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
29 பந்துகளை எதிர்கொண்ட ரிங்கு சிங், 5 பவுண்டரி மூன்று சிக்ஸர் என, 53 ரன்களை விளாசியதுடன், ஸ்ட்ரைக் ரேட் 183 என்ற அளவில் இருந்தது.
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிங்கு சிங், இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே பேசிக் கொள்வேன். இதுபோன்ற சூழ்நிலையில்தான் நான் நீண்ட காலமாக விளையாடி வருகின்றேன்.
கடினமான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து தோனியிடம் நான் பேசி இருக்கிறேன். அவர் சொன்ன அறிவுரைகள் எனக்கு நல்ல பயனை கொடுத்துள்ளது.
நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் கொஞ்சம் குறைவாக இருந்தது. இதனால் நாங்கள் சிங்கிள்ஸ் சேர்த்துக் கொண்டும் மோசமான பந்தை அடித்து ரன்கள் சேர்க்கவும் நினைத்தோம் என்று ரிங்கு கூறியுள்ளார்.
கவுதம் கம்பீர் பயிற்சியாளராக உள்ள நிலையில், ரிக்கு சிங் முன்னாள் அணித்தலைவர் தோனியை பற்றி புகழ்ந்து பேசியுள்ளதை அடுத்து, கரண்ட் கம்பியை கையில் பிடிச்சிட்டீங்களே ரிங்கு என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.