களத்தில் கடுப்பான சிராஜ்... மன்னிப்பு கேட்ட பண்ட்... நடந்தது என்ன?
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங் செய்த நிலையில், முதல் இன்னிங்சில் ஆடிய இந்தியா 376 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும், ஜெய்ஸ்வால் 56 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சில் ஆடிய வங்கதேசம் 149 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது இந்திய அணி அதன் 2-வது இன்னிங்சில் ஆடி வருகிறது.
இந்தப் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்ட நேரத்தில் வங்கதேசம் அதன் முதல் இன்னிங்சில் ஆடியது. அப்போது, சிராஜ் தனது இரண்டாவது ஓவரை வீசினார்.
அவரது ஐந்தாவது பந்தில், இடது கை ஜாகீர் ஹசனுக்கு இன்-ஸ்விங்கரை போட்டார். பந்து பேட்டரின் பேடில் பட்டதும், சிராஜ் எல்.பி.டபிள்யூ-க்கு அப்பீல் செய்தார். ஆனால், ஆன்-பீல்ட் அம்பயர் ராட் டக்கர் சிராஜின் அப்பீலுக்கு ஆர்வம் காட்டாமல் நாட் அவுட் என்று குறிப்பிட்டார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டி.ஆர்.எஸ்-க்கு செல்ல வேண்டுமா என்று ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ரிஷப் பண்ட்-டிடம் பேசினார். அவர் சிறிது நேரம் கழித்து, பந்து லெக் சைடில் கீழே போகுமாறு இருப்பதாக தெரிவித்தார்.
அதனால், டி.ஆர்.எஸ் எடுக்க வேண்டாம் என ரோகித் சர்மா முடிவு செய்தார். ஆனால், பந்து ட்ராக்கிங்கின் போது பந்து லெக் ஸ்டம்பில் விழுந்தது.
இதனைப் பார்த்த சிராஜ் ஏமாற்றமடைந்தார். இதனையடுத்து, தனது தவறுக்கு தன்னை மன்னிக்குமாறு சிராஜிடம் பண்ட் கோரினர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.