ரிஷப் பண்ட் படைத்த மாபெரும் சாதனை... 26 வயதில் மைல்கல் ரெக்கார்ட்
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலிலும் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் கவாஜாவின் கேட்ச்சை பிடித்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக 150 விக்கெட் வீழ்ச்சிகள் செய்த மூன்றாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை செய்து இருக்கிறார்.
அவருக்கு 26 வயது மட்டுமே ஆகும் நிலையில் இப்போதே அவர் தோனி மற்றும் சையது கிர்மானியின் ரெக்கார்டை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதுடன், தோனி 294 விக்கெட், சையது கிர்மானி 198 விக்கெட் கைப்பற்றி செய்து உள்ளனர். இன்னும் 40 போட்டிகளில் விளையாடினால் ரிஷப் பண்ட் அந்த ஜாம்பவான்களின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
ரிஷப் பண்ட் இதுவரை 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 135 கேட்ச் மற்றும் 15 ஸ்டம்பிங்-குகளை செய்து இருக்கிறார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலிலும் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
விவிஎஸ் லக்ஷ்மன் உடன் நான்காவது இடத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இருவரும் 135 கேட்ச்கள் பிடித்து உள்ளனர்.
தோனி - 90 போட்டிகள் - 294 விக்கெட் வீழ்ச்சி - 256 கேட்ச், 38 ஸ்டம்பிங்
சையது கிர்மானி - 88 போட்டிகள் - 198 விக்கெட் வீழ்ச்சி - 160 கேட்ச், 38 ஸ்டம்பிங்
ரிஷப் பண்ட் - 41 போட்டிகள் - 150 விக்கெட் வீழ்ச்சி - 135 கேட்ச், 15 ஸ்டம்பிங்
அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் வரிகையில், தோனி - 256 கேட்ச், ராகுல் டிராவிட் - 209 கேட்ச், சையது கிர்மானி - 160 கேட்ச், ரிஷப் பண்ட் - 135 கேட்ச், விவிஎஸ் லக்ஷ்மன் - 135 கேட்ச் பிடித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.