உடைக்கவே முடியாத சேவாக்கின் சாதனையை தரைமட்டமாக்கிய ரியான் பராக்
2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரியான் பராக் சையது முஷ்டாக் அலி ஆடினார். அப்போது ஏழு போட்டிகளில் ஆடி வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரியான் பராக் சையது முஷ்டாக் அலி ஆடினார். அப்போது ஏழு போட்டிகளில் ஆடி வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அவரது பேட்டிங் சராசரி 13 மட்டுமே. அவரது மோசமான செயல்பாடுகளால் அப்போது ரசிகர்களால் மிகக் கடுமையாக விமர்சனமும், கிண்டலும் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தன் சொந்த மாநிலமான அசாம் அணிக்காக ஆடி வருகிறார் ரியான் பராக். இந்த தொடரில் ஏழு போட்டிகளில் ஆடி உள்ள அவர் கடைசி ஆறு போட்டிகளிலும் அரைசதம் அடித்து தெறிக்க விட்டுள்ளார்.
தொடர்ந்து ஆறு டி20 போட்டிகளில் ரியன் பராக் அரைசதம் அடித்து இருக்கிறார். வீரேந்தர் சேவாக் 2012இல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்தார். அது நீண்ட நாட்களாக முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது.
பல வீரர்கள் அந்த சாதனைக்கு மிக அருகே வந்து அதை முறியடிக்காமல் சென்றனர். ஜிம்பாப்வே வீரர் மசகட்சா, பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே இங்கிலாந்து உள்ளூர் வீரர் மாட்சென் உள்ளிட்ட வீரர்களும் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்தனர். ஆனால், சேவாக் சாதனையை தொட்டாலும், யாராலும் அதை உடைக்க முடியவில்லை.
ஆனால், அசாம் மாநில வீரர் ரியான் பராக், 11 ஆண்டுகால சாதனயை உடைத்து தன் மீதான விமர்சனத்துக்கும் சேர்த்து பதிலடி கொடுத்துள்ளார். தற்போது சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஏழு போட்டிகளில் 440 ரன்கள் குவித்து இருக்கிறார். அதன் சராசரி 62.86 ஆகும். கடந்த ஆறு இன்னிங்க்ஸ்களில் அவர் குவித்த ரன்கள் - 61 (34), 76 (37), 53 (29). 76 (39), 72 (37), மற்றும் 57 (33).