மகளுக்கு சீதனமாக சொகுசு கார் கொடுத்த ரோபோ சங்கர்
காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா சங்கருக்கு சொகுசு கார் ஒன்றை சீதனமாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா சங்கருக்கு சொகுசு கார் ஒன்றை சீதனமாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தங்க புடவை, விலையுயர்ந்த நகைகள் என பல கோடி ரூபாய் செலவில் தனது மகள் இந்திரஜா சங்கருக்கு ரோபோ சங்கர் கோலாகலமாக கடந்த மார்ச் 24ம் தேதி திருமணம் செய்து வைத்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கும் கார்த்திக் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிச்சயதார்த்த விழாவே திருமணம் போல நடைபெற்ற நிலையில், மதுரையில் அதைவிட சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்றது.
நடிகையும் ரோபோ சங்கரின் மகளுமான இந்திரஜா சங்கர் திருமணம் நடைபெற்ற பின்னரும் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு செல்வது ஊருக்கே விருந்து வைப்பது என கொண்டாட்டம் இன்னமும் ஓயவில்லை.
விரைவில் சென்னையிலும், பிரம்மாண்ட திருமண வரவேற்பு விழா கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல நடிகர்களுக்காக நடத்தப்பட உள்ளது.
தனது மகள் இந்திரஜாவுக்கும் மாப்பிள்ளை கார்த்திக்கும் திருமண பரிசாக சுமார் 19 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா எலிவேட் (Honda Elevate) காரை சீதனமாக கொடுத்துள்ளார் ரோபோ சங்கர்.
சென்னையில் நடைபெற உள்ள திருமண வரவேற்பு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.