ஒருநாள் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்கிறாரா? பிசிசிஐ வெளியிட்ட தகவல்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக பிசிசிஐ தெரிவித்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை தொடரை வென்ற நிலையில், இறுதிப் போட்டியுடன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
இந்தநிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது.
அத்துடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடுவதுடன், 3 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகின்றது. இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றினால் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் மிகப் பெரிய லீக் என்பதால் அதில் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பின்னர் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கலாம் என்று பேசப்படுவதுடன், இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதயும் படிங்க: இன்னும் 96 ரன்கள் போதும்.. உலக சாதனை படைக்கப் போகும் கோலி.. சச்சினின் சாதனை தகர்ப்பு?
அந்த தகவலின்படி, தேர்வு குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ரோகித் சர்மா உடன் ஆலோசனை நடத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பின்னர் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு ரோஹித் சர்மா முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்.
அத்துடன், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிசிசிஐ சில முக்கிய திட்டங்களை வைத்துள்ளதுடன், மிக இலகுவாக கேப்டன்ஷிப் மாற்றம் நடக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.