விராட் கோலி கோட்டையில் தன் கொடியை நாட்டிய ரோஹித் சர்மா.. நடந்தது என்ன?

ஒரு கட்டத்தில் ரோஹித் சதம் அடிக்க அதனால் உற்சாகமான பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் "ரோஹித், ரோஹித்" என முழங்கினர். 

விராட் கோலி கோட்டையில் தன் கொடியை நாட்டிய ரோஹித் சர்மா.. நடந்தது என்ன?

விராட் கோலியின் கோட்டையாக கருதப்படும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ரோஹித் சர்மா தன் கொடியை நாட்டி இருக்கிறார். 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டி நடைபெற்ற, விராட் கோலியின் கோட்டையாக கருதப்படும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் "ரோஹித்" என்ற முழக்கம் விண்ணை முட்டியது. 

பெங்களூர் சின்னசாமி மைதானம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியின் மைதானம் என்பதுடன் விராட் கோலிக்கு பெங்களூரில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. 

இதுவரை ஐபிஎல் கோப்பை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லாத போதும் விராட் கோலி மீதான ஈர்ப்பால் பெங்களூரில் ஓவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பெரும் ரசிகர் கூட்டமாக திரண்டு வருவார்கள். 

இந்த நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 போட்டி நடைபெற்ற தனது கோட்டையில் விராட் கோலி பெரிதாக ரன் குவிக்கப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், கோலி சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அதைக் கண்டு ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள். பின்னர் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடினார்.

ஒரு கட்டத்தில் ரோஹித் சதம் அடிக்க அதனால் உற்சாகமான பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் "ரோஹித், ரோஹித்" என முழங்கினர். 

அதனையடுத்து, சூப்பர் ஓவரிலும் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டார்.  கடந்த சில ஆண்டுகளில் பெங்களூரில் ரோஹித் சர்மாவுக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்ததில்லை. 

அங்கே இப்போது ரோஹித் சர்மாவுக்கு கிடைத்த இந்த ஆதரவு வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் கோலி - ரோஹித் ரசிகர்கள் இந்த விஷயத்தில் மோதிக் கொண்டனர். 

கோலியின் கோட்டையை ரோஹித் தகர்த்து விட்டதாக ரோஹித் ரசிகர்களும், இல்லை என்று கோலி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp