வெற்றி பெற தகுதியே இல்லை.. எங்களுடைய மோசமான ஆட்டம் இது... கொந்தளித்த ரோகித் சர்மா!
கே எல் ராகுல் மட்டும்தான் அபாரமாக விளையாடி ஒரு கௌரவமான இலக்கை எட்ட வைத்தார். எங்களுடைய பவுலர்கள் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தவில்லை.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 131 மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. மூன்று நாட்களுக்குள்ளே போட்டி முடிவடைந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ரோகித் சர்மா, இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியே இல்லாமல் இருக்கிறோம். எங்களுக்கு முதலில் பேட்டிங் செய்யும் சூழல் ஏற்பட்டது.
கே எல் ராகுல் மட்டும்தான் அபாரமாக விளையாடி ஒரு கௌரவமான இலக்கை எட்ட வைத்தார். எங்களுடைய பவுலர்கள் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தவில்லை.
நேற்று பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதிலும் நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஒரு டெஸ்ட் போட்டியை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் ஒரு அணியாக இணைந்து விளையாட வேண்டும். அதை நாங்கள் இன்று செய்யவில்லை.
எந்த ஒரு திட்டமும் இல்லை.. இந்திய அணியின் படுதோல்விக்கான காரணம் என்ன?
ஒவ்வொருவரும் ஒரு திட்டத்தை நாங்கள் வகுத்து வைத்திருந்தோம். எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால்கள் அளிக்கப்பட்டது. சூழலுக்கு ஏற்ப எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை.
இந்த ஆடுகளம் பவுண்டரி அடித்து ஆடக்கூடிய ஆடுகளமாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் எப்படி அடித்து ஆடினார்கள் என்பதை பார்த்தாலே நமக்கு புரியும். நாங்கள் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் சரியாக விளையாடவில்லை. அதனால் தான் நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம்.
போட்டி மூன்று நாட்களில் முடிந்து விட்டது. ஆனால் கே எல் ராகுல் இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை காட்டினார். இனி அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அணியாக அடுத்த டெஸ்டுக்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று ரோகித் சர்மா கூறி இருக்கிறார்.