10 இன்னிங்ஸிலும் சொதப்பல்.. கேப்டன்சி பதவிக்கே சிக்கல்... சோகத்தில் ரோகித் சர்மா!
முதல் இன்னிங்ஸிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த ரோகித் சர்மா, இந்திய அணிக்கு தேவையான தொடக்கத்தை அளிக்காமல் ஏமாற்றினார்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடியுள்ள 10 இன்னிங்ஸிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். முதல் இன்னிங்ஸிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த ரோகித் சர்மா, இந்திய அணிக்கு தேவையான தொடக்கத்தை அளிக்காமல் ஏமாற்றினார்.
தொடக்க வீரராக அவர் ஒரு 10 ஓவர்கள் நின்றிருந்தால் கூட பின்னர் வந்த வீரர்கள் எளிதாக ஓரளவிற்கு பழைய பந்தை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்திருக்க முடியும். தென்னாப்பிரிக்கா மண்ணில் ரோகித் சர்மா இதுவரை ஒருமுறை கூட சிறப்பாக விளையாடியதில்லை.
வெற்றி பெற தகுதியே இல்லை.. எங்களுடைய மோசமான ஆட்டம் இது... கொந்தளித்த ரோகித் சர்மா!
இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, அதிகபட்சமாக 47 ரன்களை தான் விளாசி இருக்கிறார். மொத்தமாக 128 ரன்களை 12.8 பேட்டிங் சராசரியுடன் விளையாடி இருக்கிறார்.
ஏற்கனவே ரோகித் சர்மா வெளிநாட்டு ஆடுகளங்கள் என்றாலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தான் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
ரோகித் சர்மா சிறப்பாக ஆடிய ஒரே அந்நிய டெஸ்ட் தொடரும் அதுதான். இதனால் அடுத்த போட்டியிலும் ரோகித் சர்மா சொதப்பினால் அவரின் கேப்டன்சி பதவிக்கே சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த டெஸ்ட் போட்டியில் சரி இந்திய அணி வெற்றிப்பெற ரோஹித்த என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.