ஓய்வு எப்போது? சர்ச்சைகளுக்கு பதில் அளித்த ரோஹித் சர்மா!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்த உடன், நான் ஓய்வுபெறுவதாக அர்த்தம் இல்லை. தான் டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீடிப்பேன்.

ஓய்வு எப்போது? சர்ச்சைகளுக்கு பதில் அளித்த ரோஹித் சர்மா!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்டின்போது இந்திய அணியில் மிடில் வரிசையில் களமிறங்கி 3, 6 போன்ற சொற்ப ரன்களை எடுத்த ரோஹித் சர்மா, தொடர்ந்து, 3ஆவது டெஸ்டில் 10 ரன்களை எடுத்தார்.

தொடர்ந்து, 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது ஓபனர் இடத்திற்கு திரும்பிய ரோஹித் சர்மா, அதில் 3, 9 ஆகிய ரன்களை தான் சேர்த்து தொடர்ந்து படுமோசமாக சொதப்பியதால், 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா பெயர் நீக்கப்பட்டது.

ரோஹித் சர்மா நீக்கப்பட்டதால், இதுதான் அவருக்கு கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், தற்போது பேட்டிகொடுத்துள்ள ரோஹித் சர்மா, 5ஆவது டெஸ்ட் போட்டி முடிந்த உடன் ஓய்வு அறிவிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

அதில், ‘‘எனது பேட்டில் இருந்து ரன்கள் வரவில்லை. இதனால், 4ஆவது டெஸ்ட் போட்டி முடிந்த உடனே, அணித் தேர்வுக்குழு தலைவர் மற்றும் பயிற்சியாளரை சந்தித்து, 5ஆவது டெஸ்டில் என்னால் விளையாட முடியாது எனக் கூறிவிட்டேன். 

5ஆவது டெஸ்ட் மிகமுக்கியமானது என்பதால், பார்மில இருக்கும் வீரர்கள் விளையாடுவதுதான் சரியான முடிவாக இருக்கும். இது, முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட முடிவுதான்’’ எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘‘5ஆவது டெஸ்டில் விளையாகிவிட்டதால், தான் டெஸ்டில் இருந்து ஓய்வுபெற உள்ளேன் என நீங்கள் நினைத்துவிட வேண்டாம். ஓபனரகளாக கே.எல்.ராகுல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோரால் அபாரமாக செயல்பட முடிகிறது. இதனால்தான், நானாகவே ஓய்வுக்கு சென்றால். 

இதனால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்த உடன், நான் ஓய்வுபெறுவதாக அர்த்தம் இல்லை. தான் டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீடிப்பேன்’’ எனத் தெரிவித்தார்.

இந்திய அணியானது, 5ஆவது டெஸ்ட் போட்டியில் தோற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp