ரோஹித் ரசிகரால் ஏற்பட்ட பரபரப்பு... பாய்ந்த போலீஸ்.. அதிரவைத்த சம்பவம்!
அமெரிக்காவில் இது போன்று அத்து மீறுபவர்கள் மீது வழக்குப் பதியப்படுவதுடன், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
2024 டி20 உலக கோப்பை பயிற்சி போட்டியின் இடையே ரசிகர் ஒருவர் ஓடி வந்து ரோஹித் சர்மாவை கட்டிபிடித்த நிலையில், அமெரிக்க போலீஸார் பாய்ந்து வந்து மடக்கிய காட்சிகள் அதிரச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் இது போல ரசிகர்கள் அத்துமீறி மைதானத்தில் நுழைவதுடன், அவர்களை பாதுகாவலர்கள் மற்றும் போலீஸார் மடக்கிப் பிடித்து வழக்கு பதிவு செய்வது வாடிக்கையானது.
ஆனால், இதற்கு இந்தியாவில் அதிக தண்டனை கிடைக்காது என்ற நிலையில், அமெரிக்காவில் சட்டங்கள் கடுமையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அத்துமீறி நுழைந் ரோஹித் சர்மா ரசிகரை பார்த்ததும் ஐந்து அமெரிக்க போலீஸார் மைதானத்திற்குள் ஓடி வந்ததுடன், அதில் இருவர் அந்த ரசிகர் மீது பாய்ந்து தரையில் சாய்த்து, அவர் மீது அமர்ந்தனர்.
பின்னர், அவரது இரண்டு கைகளையும் பின்புறமாக மடக்கியதுடன், அவரை தரையோடு இருக்குமாறு எச்சரித்தனர்.
அவர் லேசாக அசைந்த நிலையில், அவர் மீது அழுத்தம் கொடுத்த காட்சிகள் அனைவருக்கும் அதிரச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, அருகில் நின்று கொண்டிருந்த ரோஹித் சர்மா அந்த ரசிகரை விட்டு விடுமாறு போலீஸாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அமெரிக்காவில் இது போன்று அத்து மீறுபவர்கள் மீது வழக்குப் பதியப்படுவதுடன், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
தற்போது இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அச்சுறுத்தலும் இருப்பதாக கூறப்படும் நிலையில், இனி வரும் போட்டிகளில் அமெரிக்க போலீஸார் இன்னும் கடுமையாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.