கம்பீரின் செயலால் கடுப்பான ரோஹித்... டெஸ்ட் அணியில் இனி இடமில்லை.. அணிக்குள் நெருக்கடி?

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய கவுதம் கம்பீர் பிளேயிங் லெவனை போட்டிக்கு முன் முடிவு செய்வோம் எனக் கூறி இருந்தார்.

கம்பீரின் செயலால் கடுப்பான ரோஹித்... டெஸ்ட் அணியில் இனி இடமில்லை.. அணிக்குள் நெருக்கடி?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே விரிசலில் இருந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியதுக்கு அதுவே காரணம் என்று கூறப்படுகின்றது.

முன்னதாக, ரோஹித் சர்மா அணியில் இடம் பெற மாட்டார் என தகவல் வெளியான நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய கவுதம் கம்பீர் பிளேயிங் லெவனை போட்டிக்கு முன் முடிவு செய்வோம் எனக் கூறி இருந்தார்.

இதனையடுத்து, ரோஹித் சர்மா நீக்கப்பட்டாரா அல்லது அவராகவே விலகினாரா என்ற குழப்பம் நிலவியதுடன்,  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரோஹித் சர்மா, சரியாக ரன் குவிக்காததால் ஐந்தாவது போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், கவுதம் கம்பீர் தான் அணியை நிர்வகிக்கிறார் என்பதாகவும், அணியில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் அவரே பொறுப்பு என்று கட்டமைக்கப்படும் பிம்பத்தை ரோஹித் சர்மா விரும்பவில்லை. 

குறிப்பாக தனது விஷயத்தில் கவுதம் கம்பீர் தான் முடிவு எடுக்கிறார் என செய்தி வெளியானதால், வெளி உலகுக்கு அதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் எனக் கூறப்படுகிறது. 

அந்தப் பேட்டியில் அணியின் நலனை கருத்தில் கொண்டு தானே விலகியதாகவும்,  தான் ஓய்வு பெறவில்லை எனவும் ரோஹித் சர்மா விளக்கம் அளித்தார். 

ஆனால், உண்மையில் ரோஹித் சர்மாவுக்கு இனி டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படாது எனக் கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது ரோஹித் சர்மா, தான் ஓய்வு பெறவில்லை எனக் கூறி இருப்பது தன்னை பற்றிய பிம்பம் ரசிகர்கள் மத்தியில் உடைந்து விடக்கூடாது என்பதற்காகவே என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் இந்திய அணியில் கவுதம் கம்பீரால் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிவதுடன், இந்த தொடரில் மூத்த வீரரான சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

அஸ்வின் ஓய்வை அறிவிப்பதாக இருந்தால் தொடரின் முடிவில் அறிவித்திருக்கலாம். ஆனால், பாதியிலேயே அவர் ஓய்வை அறிவித்து விட்டு சென்றமைக்கு  கவுதம் கம்பீர் காரணமாக இருப்பாரோ என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp