யாரும் செய்யாத தியாகம்.. ரோஹித் செய்ததை நினைத்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்!

ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். இதற்கு முன் எப்போதும் இருந்ததை விட அவர் விக்கெட்டை பற்றி யோசிக்காமல் முதல் 10 ஓவர்களிலேயே எதிரணியை திணற வைக்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.

யாரும் செய்யாத தியாகம்.. ரோஹித் செய்ததை நினைத்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்!

ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். இதற்கு முன் எப்போதும் இருந்ததை விட அவர் விக்கெட்டை பற்றி யோசிக்காமல் முதல் 10 ஓவர்களிலேயே எதிரணியை திணற வைக்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அவர் 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். 

இத்தனைக்கும் போட்டி நடந்த கொல்கத்தா ஆடுகளம் மெதுவாக இருந்தது. அப்படி இருந்தால் பேட்டிங் செய்வது கடினம் தான். பொதுவாக இது போன்ற ஆடுகளங்களில் மற்ற அணிகள், முதல் 40 ஓவர்களில் நிதான ஆட்டம் ஆடி விட்டு கடைசி 10 ஓவரில் அடித்து ஆடுவார்கள். 

ஆனால், ரோஹித் சர்மா தலைகீழாக செய்தார். முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். முடிந்தவரை அடித்து ஆடிய அவர் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து சென்றார்.

அதன் பின் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் என யாராலும் ரோஹித் சர்மா அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆட முடியவில்லை. அப்படி ஆடினால் விக்கெட் போய்விடும் என்ற அச்சத்தில் அவர்கள் நிதான ஆட்டம் ஆடினார்கள். 

அந்த பிட்ச் அப்படிப்பட்ட பிட்ச். அதில் முதல் 6 ஓவரில் இந்தியா 60 ரன்கள் எடுத்தது என்றால் அதற்கு ரோஹித் சர்மா என்ற ஒருவர் மட்டுமே காரணம். ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி ரன் ரேட்டை அதிகமாக ஆக்கியதால் தான் மற்ற வீரர்கள் ரன் ரேட் அழுத்தம் இன்றி நிதான ஆட்டம் ஆட முடிந்தது. 

ரோஹித் போட்ட அடித்தளம் தான் இந்தியா 326 ரன்கள் எடுக்கவே காரணம். இதை சுட்டிக் காட்டி ரசிகர்கள் பலர் ரோஹித் சர்மாவும் மற்றவர்கள் போல சுயநலமாக அரைசதம் அடிக்க வேண்டும், சதம் அடிக்க வேண்டும் என நிதான ஆட்டம் ஆடி இருந்தால் மற்ற வீரர்களால் இப்படி பொறுமையாக ஆடி இருக்க முடியுமா? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், ரோஹித் அணியை மட்டுமே எண்ணி, தான் அதிரடி ஆட்டம் ஆடினால் தான் மிடில் ஆர்டர் அழுத்தம் இன்றி ஆடுவார்கள் என எண்ணி செய்த தியாகத்தால் தான் தென்னாப்பிரிக்கா போட்டியில் இந்தியா 326 ரன்கள் குவித்தது என ரோஹித் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. ஜடேஜா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...