எல்லாவற்றிலும் தலையிடும் கம்பீர்... எதிர்த்து பேச முடியாத நிலை... கடும் கோபத்தில் ரோகித்!
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என வெற்றி நடை நடந்து வந்தது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என வெற்றி நடை நடந்து வந்தது.
இந்த நிலையில், தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு, 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையிடம் இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்திருக்கிறது.
இது ரோகித் சர்மாவை கடுப்படையச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
ஒரு போட்டியில் எந்த முடிவை எடுப்பது மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் ஒரு கேப்டன் கையில் தான் இருக்கிறது. அதன்படி, இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா எப்போதும் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார்.
ஆனால் இலங்கைத் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டனாக செயல்பட விடாமல் கம்பீர் தலையிட்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சோதனை செய்கிறேன் என்ற பெயரில் கம்பீர் தேவை இல்லாமல் பேட்டிங் வரிசையை ரோகித் சர்மாவின் பேச்சை மீறி மாற்றி இருக்கிறார்.
அத்துடன், அக்சர் பட்டேல் போன்ற வீரர்களையெல்லாம் நடு வரிசையில் களமிறக்கி இருக்கிறார். இதனால் கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களின் உத்வேகம் ஆட்டம் கண்டு இருக்கிறது.
இதுதான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் முஹமது சிராஜ் என்ற ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை வைத்து களமிறங்கியதெல்லாம் மோசமான தீர்மானமாக பார்க்கப்படுகிறது.
இது அனைத்துமே கம்பீர் எடுத்த முடிவு என்றும், கம்பீர் தன்னுடைய சீனியர் வீரர் என்பதால் தற்போது அவர் பயிற்சியாளராக இருக்கும்போது, இதற்கு எதிர்த்து பேச முடியாத நிலையில் ரோகித் சர்மா இருக்கிறார்.
இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் ரோகித் சர்மா கம்பீர் மீது புகார் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் தொடரிலே கம்பீர் பயிற்சியாளராக மோசமாக செயல்பட்டு இருக்கிறார் என்று ரசிகர்களும் அவரை விமர்சித்து வருகின்றனர்.