ரோகித்திடம் சண்டை... அணியை விட்டு போட்ட இசான் கிஷன் விலகியதன் பின்னணி என்ன ? இந்திய அணியில் விரிசலா?
விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து இஷான் கிஷன் தெரிசெய்யப்பட்டதுடன், கிடைத்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா அண்மையில் நீக்கப்பட்டதால் அவருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு உள்ளதால், ரோகித் சர்மா வீரர்களிடையே சரியாக நடந்து கொள்கிறாரா என்று கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து இஷான் கிஷன் தெரிசெய்யப்பட்டதுடன், கிடைத்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் நன்றாக விளையாடினார். இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் திடீரென்று இசான் கிஷனுக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா சேர்க்கப்பட்டது அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் தமக்கு மனதளவில் ஓய்வு தேவை என்று கூறி இசான் கிஷன் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், டி20 அணியில் பொறுத்தவரை இசான் கிஷன் தொடக்க வீரராக இருந்தாலும், ஜெய்ஸ்வால் கில் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் நடுவரிசையில் மட்டுமே விளையாட இடம் இருந்தது.
ஆனால் இஷான் கிஷனுக்கு அந்த இடம் சரி வராது என்பதால் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு ஜித்தேஷ் சர்மாவை இந்திய அணி நிர்வாகம் கொண்டு வந்தது.
இந்த நிலையில் கேப்டனாக ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் திரும்பியவுடன் இந்த நிலை மாறும் என இசான் கிஷன் எதிர்பார்த்தார். ஆனால் ரோகித் சர்மா இது குறித்து கண்டு கொள்ளவில்லை.
மேலும், இசான் கிஷனை எப்போதும் போல் விளையாட்டுக்காக திட்ட, கடுப்பான இஷான் தமக்கு இந்திய அணியில் தற்போது இடம் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அதுமட்டுமில்லாமல், தற்போது ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், ரோகித் சர்மாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் நிலையில் ரோகித்தை வெறுப்பேற்றுவதற்காக இசான் கிஷன் மாறிவிட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
இஷான் கிசனுக்கு ஆதரவாக ரோகித் சர்மா பலமுறை செயற்பட்டுள்ளதுடன், மும்பை இந்தியன்ஸ் அணி அதிக தொகை கொடுத்து இசான் கிஷனை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணமே ரோகித் சர்மா தான்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் நடவடிக்கையை சரியாக புரிந்து கொள்ளாமல் இஷான் கிஷன் அவர் மீது கோபமாக இருக்கிறார் என்று கூறப்படுகின்றது.