சாதனைக்கு தயாராகும் ரோகித் சர்மா... டி20 போட்டியில் மெகா சாதனை படைப்பாரா?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு மெகா சாதனை படைக்கும் வாய்ப்பு உள்ளது.

சாதனைக்கு தயாராகும் ரோகித் சர்மா... டி20 போட்டியில் மெகா சாதனை படைப்பாரா?

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளதுடன், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அதன்பின் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தார். அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தேடி சென்று விக்கெட்டை விட்டுக் கொடுத்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

25 வயது வீரருக்கு அடித்த அதிஷ்டம்... இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்?

இதனால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தனது பேட்டிங் திறமையை ரோகித் சர்மா நிச்சயம் மீட்பார் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், கடந்த ஜனவரி மாதம் போல, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு மேஜிக்கை ரோகித் சர்மா செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு மெகா சாதனை படைக்கும் வாய்ப்பு உள்ளது.

அதாவது, டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இதுவரை 194 சிக்சர்களை விளாசி உள்ளதுடன், இன்றைய போட்டியில் 6 சிக்சர்களை ரோகித் சர்மா அடித்தால், 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். 

இந்த பட்டியலில் 194 சிக்சர்களுடன் ரோகித் சர்மா முதலிடத்திலும், 173 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் கப்தில் 2வது இடத்திலும், 130 சிக்சர்களுடன் இங்கிலாந்து கேப்டன் பட்லர் 3வது இடத்திலும், 129 சிக்சர்களுடன் ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் 4வது இடத்திலும் இருக்கின்றனர்.

ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற மெகா சாதனையை படைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இதனால், இன்றைய போட்டி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp