பொய் சொல்லி ஸ்டார் வீரரின் சோலியை முடித்த ரோஹித்...  பிசிசிஐ கடும் அதிருப்தி!

ஒரேயொரு பொய் மூலம், இந்திய அணி நட்சத்திர வீரரின் வாழ்க்கையை ரோஹித் அழித்துவிட்டதால் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பொய் சொல்லி ஸ்டார் வீரரின் சோலியை முடித்த ரோஹித்...  பிசிசிஐ கடும் அதிருப்தி!

ஒரேயொரு பொய் மூலம், இந்திய அணி நட்சத்திர வீரரின் வாழ்க்கையை ரோஹித் அழித்துவிட்டதால் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வீரர் ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பாக விளையாடவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராக, அவரால் ரன்களை சேர்க்க முடியவில்லை.

ஸ்பின்னர்களை அபாரமாக எதிர்கொள்ளக் கூடியவர் என்பதால் தான்  ஷ்ரேயஸ் ஐயரை அணியில் வைத்துள்ளனர். ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாற்றத்துடன் ஆடினார்.

ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பாக செயல்படாத காரணத்தினாலும், அவருக்கு லேசான முதுகு வலி இருந்ததாலும் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் இல்லை. இது, ஷ்ரேயஸ் ஐயருக்கு கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

சில நாட்களில், முகுது வலி பிரச்சினை தீர்ந்துவிட்ட நிலையில், அவரை ரஞ்சிக் கோப்பையில் ஆடச் சொல்லி பிசிசிஐ கேட்டுக்கொண்டதால், ஷ்ரேயஸ் ஐயர், தனக்கு காயம் இருக்கிறது எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஷ்ரேயஸ் ஐயரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முழு பிட்னஸுடன் இருக்கிறார் எனக் கூறியதால், ஷ்ரேயஸ் ஐயர் உடனே ரஞ்சிக் கோப்பைக்கு திரும்ப வேண்டும் என பிசிசிஐ கூறியது. எனினும், அவரோ ஐபிஎலுக்காக பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தார்.

இந்நிலையில், ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து ஷ்ரேயஸ் ஐயரை பிசிசிஐ நீக்கியுள்ளது. இதனால், ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

''ஐபிஎல் 2023 தொடரை புறக்கணித்து, உலகக் கோப்பைக்கு தயாராகி வந்தேன். அறுவை சிகிச்சை காரணமாக இருந்த வலியை போக்க, உலகக் கோப்பையின் போது, வலி நிவாரண ஊசியை எடுத்துக் கொண்டேன்.

அரையிறுதி, இறுதிப் போட்டியின்போது, எவ்வளவு வலிகளை அனுபவித்தேன் என்பது ரோஹித் சர்மாவுக்கு தான் தெரியும். அவரிடம் மட்டுமே பகிர்ந்துகொண்டேன்'' என ஷ்ரேயஸ் ஐயர் கூறினார்.

''தென்னாப்பிரிக்க டி20, டெஸ்ட் தொடரில் விளையாடினேன். இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் விளையாடினேன். ரஞ்சிக் கோப்பை காலிறுதியில் மட்டும்தானே ஓய்வு கேட்டேன். அரையிறுதியில் விளையாட ஒப்புக்கொண்ட போதும், என்னை ஏன் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்? என ஷ்ரேயஸ் ஐயர் சோகத்துடன் பேசியுள்ளார்.

ஷ்ரேயஸ் ஐயருக்கு அவ்வபோது லேசான வலி இருந்தும், அதனை மறைத்து விளையாடிய நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா இதுகுறித்து ஒருமுறை கூட பிசிசிஐயிடம் தெரிவிக்கவில்லை. 

அத்துடன், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போதும், அவர் வலி அனுபவதித்ததை தெரிவிக்கவில்லை. ஷ்ரேயஸ் ஐயராக வாய்விட்டு சொன்னப் பிறகுதான் தெரியும் என பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp