இந்தியா முன்னிலை.. ரோஹித் சர்மா போட்ட மாஸ் திட்டம்... வெறுத்துப் போன ரபாடா!

ரபாடாவை தவிர ஏனைய பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசாமல், பந்துகள் சரியான லைன், லென்த் இல்லாமல் வீசப்பட்டன. 

இந்தியா முன்னிலை.. ரோஹித் சர்மா போட்ட மாஸ் திட்டம்... வெறுத்துப் போன ரபாடா!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் மாஸ் திட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணி 10 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அடைந்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் களமிறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியை 55 ரன்களில் ஆல் - அவுட் செய்து அதிரடி காட்டியது இந்திய அணி. 

இந்திய அணியை குறைந்த ரன்களில் வீழ்த்தலாம் என வெறி கொண்டு ரபாடா விக்கெட் வேட்டையாடலாம் என நம்பிக்கையுடன் வந்தார். அவர் திட்டப்படி மூன்றாவது ஓவரில் இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனார்.

ஆனால், மற்றொரு துவக்க வீரரானா கேப்டன் ரோஹித் சர்மா வேறொரு பேட்டிங் திட்டத்தை செயல்படுத்தினார். 

இந்திய அணி முன்னிலை பெற்று விட்டால் தென்னாப்பிரிக்க அணி நம்பிக்கை இழந்து விடும்.  55 ரன்களுக்குள் அதிக விக்கெட்கள் விழுந்து விட்டால், தென்னாப்பிரிக்கா தன்னம்பிக்கை பெற்று விடும்.

11 பந்துகளில் 6 விக்கெட்டுகள்... கண்மூடி திறப்பதற்குள் காலியான இந்தியா... நடந்தது என்ன? 

அதை செய்ய விடக் கூடாது என முடிவு செய்த ரோஹித், ஒருநாள் போட்டிகள் போல முதல் பத்து ஓவர்களை பவர்பிளே போல ஆட திட்டமிட்டு ஆடினார். அதே சமயம், ஆபத்தான வீரரான ரபாடா ஓவர்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார். 

ரபாடா ஓவர்களில் எல்லாம் பவுண்டரி அடிக்காமல் தடுப்பாட்டம் ஆடிய ரோஹித், மற்ற பந்துவீச்சாளர்களான என்கிடி மற்றும் பர்கர் ஓவர்களில் பவுண்டரியாக அடித்தார். இதை அடுத்து இந்திய அணி முதல் பத்து ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களை எடுத்தது. 

டெஸ்ட் போட்டியில் ஓவருக்கு 6 ரன்கள் என்ற கணக்கில் ரன் குவித்து தெறிக்க விட்டார் ரோஹித் சர்மா. தென்னாப்பிரிக்க அணியை விட இந்தியா 10 ஓவர்களில் எல்லாம் முன்னிலை பெற்றதால் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் வெறுப்படைந்து அவர்களின் பந்துவீச்சில் தெரியத் துவங்கியது.

ரபாடாவை தவிர ஏனைய பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசாமல், பந்துகள் சரியான லைன், லென்த் இல்லாமல் வீசப்பட்டன. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp