மீண்டும் சொதப்பிய ரோகித் சர்மா... 2 ரன்களில் ஆட்டமிழப்பு... தடுமாறும் இந்திய அணி கேப்டன்!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

மீண்டும் சொதப்பிய ரோகித் சர்மா... 2 ரன்களில் ஆட்டமிழப்பு... தடுமாறும் இந்திய அணி கேப்டன்!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸில் 91 ரன்கள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக 31 ரன்கள் என ரோகித் சர்மா அண்மை காலமாக மோசமாக விளையாடி வருகிறார்.

இதன் காரணமாக பிசிசிஐ நிர்வாகிகள்  ரோகித் சர்மா மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கோப்பையை வென்று தரவில்லை என்றால், அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று தேர்வுக்குழு எச்சரிக்கை விடுத்து உள்ளாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ரோகித் சர்மா ரஞ்சி போட்டியிலும் விளையாடிய நிலையில், அதிலும் அவர் 30 ரன்களை கூட தாண்டவில்லை என்ற நிலையில், ஆறு மாதம் கழித்து ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரோகித் சர்மா அதிரடியாக ரன் குவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் வழக்கம் போல் ரோகித் சர்மா ஏழு பந்துகளை எதிர்கொண்டு வெறும் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்ததுடன், ரோகித் சர்மா, கடந்த 10 இன்னிங்ஸ்களாக இந்திய அணிக்காக விளையாடி ஒருமுறை கூட 20 ரன்கள் தொடவில்லை.

ரோகித் சர்மா இந்திய அணிக்காக 0, 8, 18,1, 3 ,6, 10,3,9,2 ஆகிய ரன்களை அடித்துள்ள நிலையில், இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர்தான் அவருக்கு கடைசியாக இருக்கும் என பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp