ஒரே போட்டியில் மாபெரும் சாதனை படைத்த ரோஹித்... எத்தனை சாதனை தெரியுமா?
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். 7 நான்கு ஒட்டங்கள், 8 சிக்ஸ் என அடித்து ஆஸ்திரேலிய அணியை திணற வைத்தார்.
இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளை ரோஹித் சர்மா செய்து உள்ளார்.
சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குறித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் இந்தியாவின் விராட் கோலி ஆகிய இருவரையும் பின்தள்ளிவிட்டு ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
ரோஹித் சர்மா 149 இன்னிங்ஸ்களில் 4165 ரன்கள் எடுத்துள்ளதுடன், அவரது சராசரி 32 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 140.75 ஆகும்.
பாபர் அசாம் 116 இன்னிங்ஸ்களில் 4145 ரன்கள் எடுத்துள்ளதுடன், அவரது சராசரி 41 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 129 ஆகும்.
விராட் கோலி 115 இன்னிங்ஸ்களில் 4103 ரன்கள் எடுத்துள்ளதுடன், அவரது சராசரி 49 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 137 ஆகும்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்த மெகா சாதனை.. இவர்தான் முதல் வீரர்!
அத்துடன், டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள் வரிசையிலும் முதல் இடத்தை பாபர் அசாமுடன் பகிர்ந்து ரோஹித் சர்மா கொண்டு உள்ளார்.
பாபர் அசாம் 85 போட்டிகளில் 48 வெற்றிகள் பெற்று இருக்கிறார். ரோஹித் சர்மா 60 போட்டிகளில் 48 வெற்றிகள் பெற்று இருக்கிறார்.
மேலும், இந்தப் போட்டியில் தன் 200ஆவது சர்வதேச டி20 சிக்ஸரை ரோஹித் சர்மா கடந்ததுடன், சர்வதேச டி20 போட்டிகளில் 200 சிக்ஸ் என்ற மைல்கல்லை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.
மேலும், மிட்செல் ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரில் 29 ரன்கள் குவித்து, சர்வதேச டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரோஹித் படைத்தார்.