ரோகித் சர்மா அதிரடி... 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை.. சச்சின் ரெக்கார்ட் தகர்ப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்து உள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்து உள்ளார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 228 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
பவர் பிளேவை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி அதிக அளவு ரன்களை சேர்க்க முயற்சித்த நிலையில், ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியை காட்டினார்.
வங்கதேச பந்துவீச்சை பௌண்டரிக்கு விரட்டிய ரோகித் சர்மா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், 11 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா சொந்தமாக்கினார்.
அத்துடன், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
விராட் கோலி 221 இன்னிங்ஸிலும் சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸிலும், பாண்டிங் 286 இன்னிங்சிலும், கங்குலி 288 இன்னிங்சிலும் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், ரோகித் சர்மா 261 இன்னிங்சில் எட்டி இருக்கிறார்.
இதேவேளை, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களையும், விராட் கோலிக்கு பிறகு அதிவேகமாக எட்டி ரோகித் சர்மா சாதனை படைத்து இருந்ததுடன், பத்தாயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை தொட ரோகித் சர்மா வெறும் இருபது இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ரோகித் சர்மா முதல் ஆயிரம் ரன்களை எடுக்க தான் 43 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டதுடன், அடுத்த ஆயிரம் ரன்ளை சேர்க்க 39 இன்னிங்ஸும் , 3000 வர 21 இன்னிங்ஸூம், 4000 ரன்கள் வர 23 இன்னிங்ஸும் எடுத்துக் கொண்டார்.
அத்துடன், 4 ஆயிரத்திலிருந்து 5000 ரன்கள் வர ரோகித் வெறும் 16 இன்னிங்ஸ் மட்டுமே ரோகித் சர்மா எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.