புது கேப்டனை தெரிவு செய்ததும் ஓய்வு... பிசிசிஐயிடம் வெளிப்படையாக கூறிய ரோஹித்!
ரோஹித் சர்மா எப்போது ஓய்வு அறிவிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பிசிசிஐ மீட்டிங்கில் பேசியுள்ளார்.
ரோஹித் சர்மா எப்போது ஓய்வு அறிவிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பிசிசிஐ மீட்டிங்கில் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா படுமோசமாக சொதப்பியதுடன், ஆஸ்திரேலிய மண்ணில், வெளிநாட்டு கேப்டனின் மோசமான சராசரியை பெற்றார்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்தப் பிறகு, ரோஹித் சர்மாவின் கேப்டன்சி சிறப்பாக இல்லை என்ற நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து, ரோஹித் சர்மா தானாகவே வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் முடிந்தப் பிறகு, ரோஹித் சர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது எனத் தகவல் வெளியாகி இருக்கின்றது.
நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற பிசிசிஐ மீட்டிங்கில் இந்திய அணியின் புதுக் கேப்டன் குறித்து விவாதம் நடந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் போன்றவர்களும் அங்க இருந்துள்ளனர்.
ரோஹித் சர்மாவிடம், ஓய்வு முடிவு குறித்து அகார்கர் வெளிப்படையாக கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ரோஹித், ‘‘எப்போது, புதுக் கேப்டனை தேர்வு செய்துவிட்டோம் என பிசிசிஐ என்னிடம் தெரிவிக்கிறதோ, அப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிடுவேன். அதுவரை நான் கேப்டனாக தொடர்வேன்’’ என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு பேசிய அஜித் அகார்கர், ஜூன் மாதத்தில் துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புது அணியை கட்டமைக்க விரும்புகிறோம். நீண்ட காலத்திற்கு ஏற்ப, இளம் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த உடனே, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதுடன், விராட் கோலியும் ஒருநாள் போட்டிகளுக்கு ஓய்வு அறிவித்துவிட்டு, டெஸ்டில் மட்டும் தொடர்ந்து விளையாட வாய்ப்பு உள்ளது.