கொஞ்ச நேரம் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா... விட்டுக்கொடுத்த ஹர்திக் பாண்டியா!

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில், ஒரு விஷயத்திற்கு மட்டும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.

கொஞ்ச நேரம் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா... விட்டுக்கொடுத்த ஹர்திக் பாண்டியா!

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில், ஒரு விஷயத்திற்கு மட்டும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.

மும்பை வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பிட்ச், முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டால், சிக்ஸர் மழை இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், ஆர்சிபிக்கு எதிராக மும்பை அணி பௌலர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்கள்.

அந்த வீரர் சொதப்பினாலும் இந்திய டி20 அணியில் நிச்சயம் இடம் கொடுப்பேன்: அகார்கர் அதிரடி!

இப்போட்டியில், ஆர்சிபிக்கு எதிராக டிஆர்எஸ் எடுக்கும் வேலையை ரோஹித் சர்மாதான் செய்தார். விக்கெட் கீப்பர் மற்றும் அருகில் இருக்கும் பீல்டர்கள் அனைவரும் கேட்டு, ரோஹித் இறுதி முடிவை எடுத்து, அதனை ஹர்திக்கிடம் கூறினார். ரோஹித் வேண்டாம் எனக் கூறிவிட்டால், ஹர்திக் டிஆர்எஸ் எடுக்கவே இல்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மீது, அதிருப்திகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், ரோஹித் சர்மாவுக்கும் ஒரு முக்கியமான வேலையை ஹர்திக் கொடுத்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp