ஹர்திக்கை கேப்டனாக ஏற்க மறுத்த பந்துவீச்சாளர்... ரோஹித்திடம் ஆலோசனை... கடைசி ஓவரில் என்ன நடந்தது?

இஷான் கிஷன் முதல் ஓவரில் அதிரடி காட்டாத நிலையில், அடுத்தும் அதிரடி காட்ட தவறி, 8 பந்துகளில் 8 ரன்களை அடித்து நடையைக் கட்டினார்.

ஹர்திக்கை கேப்டனாக ஏற்க மறுத்த பந்துவீச்சாளர்... ரோஹித்திடம் ஆலோசனை... கடைசி ஓவரில் என்ன நடந்தது?

நடப்பு ஐபிஎல் 33ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இஷான் கிஷன் முதல் ஓவரில் அதிரடி காட்டாத நிலையில், அடுத்தும் அதிரடி காட்ட தவறி, 8 பந்துகளில் 8 ரன்களை அடித்து நடையைக் கட்டினார்.

இப்போட்டியின் மூலம், 250ஆவது ஐபிஎல் ஆட்டத்தில் ஆடி வரும் ரோஹித் சர்மா, பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 36 (25) ரன்களை மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

மூன்றாவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 53 பந்துகளை எதிர்கொண்டு, 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 78 ரன்களை குவித்து அசத்தினார். ஐபிஎலில், இரண்டாவது முறையாக 50+ பந்துகளை, இன்று எதிர்கொண்டார்.

சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தப் பிறகு, திலக் வர்மா மட்டுமே அதிரடியாக விளையாடினார். 18 பந்துகளில் தலா இரண்டு பவுண்டரி, சிக்ஸர்களை அடித்த அவர், 34 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். இருப்பினும், ஹர்திக், டிம் டேவிட் ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 பந்தில் ஒரு சிக்ஸர் உட்பட 10 ரன்களை மட்டும் எடுத்து, நடையைக் கட்டினார். டிம் டேவிட்டும் 7 பந்துகளில் 14 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால்தான், மும்பை அணியால் 200 ரன்களை எட்ட முடியவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 192/7 ரன்களை அடித்துள்ளது. போட்டி நடைபெறும் பிட்ச், முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமாக இருப்பதால், பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த இலக்கை துரத்தி வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், முதல் நான்கு பேட்டர்கள் சாம் கரன், பிரப்சிம்ரன் சிங், ரிலே ரூசோவ், லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு எதிராக தலா 2 விக்கெட்களை பும்ரா, காட்ஷி ஆகியோர் வீழ்த்தினர்.

இதனால், 14/4 என தடுமாறிய பஞ்சாப் கிங்ஸ் அணியை சாஷங் சிங் 41 (25), அசுதோஷ் சர்மா 61 (28), ஹர்மன்பிரித் கௌர் 21 (20) ஆகியோர் தூக்கி நிறுத்தினார்கள். 
இருப்பினும், விக்கெட் கையிறுப்பு இல்லாத காரணத்தினால், பஞ்சாப் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 183/10 ரன்களை எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியைப் பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. பஞ்சாப் அணியிடம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், கடைசி ஓவரை வீச ஆகாஷ் மத்வால் வந்தார். 

இவரிடம் ஹர்திக் அறிவுரை கூற வந்த நிலையில், அதனை தவிர்த்து நேரடியாக ரோஹித் சர்மாவிடம் சென்று ஆலோசனை கேட்டார். அதன்பிறகு, முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. மும்பை த்ரில் வெற்றியைப் பெற்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp